மண்டை ஓட்டை உருவாக்கி மூன்று பேருக்கு இலவச சிகிச்சை

மண்டை ஓட்டை உருவாக்கி மூன்று பேருக்கு இலவச சிகிச்சை

2 mins read

சென்னை: சென்னை கீழ்ப்­பாக்கம் அரசு மருத்­து­வ­மனை முப்­பரிமாண தொழில்­நுட்­பத்­தில் செயற்கை மண்டை ஓட்­டைச் செய்து மூன்று பேருக்கு வெற்றி­க­ர­மான முறை­யில் அறு­வை­சிகிச்சை நடத்தி இருக்­கிறது.

அந்­தச் சிகிச்­சையைச் செய்து­கொண்ட கல்­லூரி மாண­வர், குளி­ரூட்­டிச் சாதன நிபு­ணர், தச்சு தொழி­லாளி ஆகிய மூவ­ரும் நன்கு குண­ம­டைந்து வரு­வ­தாக மருத்­து­வ­மனை தக­வல் வட்­டாரங்­கள் தெரி­வித்­தன.

அந்த மூவ­ரும் வெவ்­வேறு விபத்­து­களில் சிக்கி தலை­யில் அடி­பட்டு உயி­ருக்கு ஆபத்­தான நிலை­யில், கீழ்ப்­பாக்­கம் அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

அவர்­க­ளுக்கு நரம்பு ஒட்­டு­உறுப்பு அறுவை சிகிச்சை செய்ய மருத்­து­வக் குழு முடிவு செய்­தது.

முத­லில் அந்த மூவ­ருக்­கும் தலை­யில் அடி­பட்ட இடத்­தில் மண்டை ஓடு அகற்­றப்­பட்­டது. ரத்த ஓட்­டம் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. அகற்­றப்­பட்ட மண்டை ஓட்டிற்­குப் பதி­லாக முப்­ப­ரி­மாண தொழில்­நுட்­பத்­தின்­படி செயற்­கை­யாக மண்டை ஓட்­டைச் செய்து பொருத்­து­வ­தற்கு மருத்­து­வக் குழு முடிவு செய்­தது.

முத­லா­வ­தாக நோயா­ளி­களின் தலை­கள் முப்­ப­ரி­மாண தொழில்­நுட்­பத்­தின் மூலம் உரு­வாக்­கப்­பட்டு கபா­லத்­தில் எந்த அள­வுக்கு அடைக்க வேண்­டும் என்­பது துல்­லி­ய­மா­கக் கணக்­கி­டப்­பட்­டது.

அதன் அடிப்­ப­டை­யில் டைட்­டா­னி­யம் என்ற பொரு­ளைக் கொண்டு செயற்கை மண்டை ஓடு உரு­வாக்­கப்­பட்டு மூவருக்­கும் பொருத்­தப்­பட்­டது. சிகிச்சைக்­குப் பின் அந்த மூவ­ரும் நன்கு குண­ம­டைந்து வரு­வ­தாக மருத்­து­வ­மனை வட்­டா­ரங்­கள் கூறின.

இத­னி­டையே, அந்த அறுவை சிகிச்சை பற்றி கருத்­து­க் கூ­றிய அந்த மருத்­து­வ­ம­னை­யின் நரம் பி­யல் அறுவை சிகிச்­சைத் துறை தலை­வர் டாக்­டர் நாரா­யண சாமி, "முப்­ப­ரி­மாண தொழில்­நுட்­பம் மூலம் செயற்கை மண்டை ஓட்டை உரு­வாக்கி சிகிச்சை அளிப்­ப­தால் தலை­யில் தழும்பு எது­வும் தெரி­யாது. நான்­கா­வ­தாக மேலும் ஒரு­வ­ருக்கு இதே போன்ற சிகிச்சை அளிக்க இருக்­கி­றோம்," என்று கூறி­னார்.

இந்­தச் சிகிச்சை, முதல்­வ­ரின் மருத்­து­வக் காப்­பீட்டுத் திட்­டத்­தின் கீழ் செய்­யப்­பட்­ட­தால் இதற்­கான தலா ரூ.5 லட்­சம் கட்­ட­ணத்தை நோயா­ளி­கள் செலுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று அவர் தெரி­வித்­தார்.