திருப்பத்தூர்: தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர்நாடு என்ற குக்கிராமத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேய் தீவிர சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவிலேயே இதுதான் இத்தகைய முதல் நிலையம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கிராமத்தில் 27,000 பேர் வசிக்கிறார்கள். அவர்கள் பழங்குடியினர். அந்நிலையத்தில் ஆறு படுக்கைகள் உள்ளன.
புதூர்நாடு கிராமத்திலும் அதைச் சுற்றிலும் உள்ள கிராமங்களிலும் பிறக்கும் குழந்தைகளையும் தாய்மார்களையும் பாதுகாப்பதே இந்த நிலையத்தின் நோக்கம் என்று மாநில அதிகாரியான டாக்டர் எஸ் சீனிவாசன் தெரிவித்தார்.

