சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.1.06 கோடி மதிப்புள்ள நியாய விலைக் கடை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தப் பொருள்கள் கள்ளச் சந்தையில் விற்பதற்காக கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
3,350 குவிண்டால் அரிசி, 186 எரிவாயு உருளைகள், 250 கிலோ கோதுமை, 45 கிலோ துவரம்பருப்பு, 380 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவையும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 174 வாகனங்களும் பிடிபட்டன. மொத்தம் 552 பேர் கைதாயினர்.
அவர்கள் மீது வழக்குப் பதிந்து முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

