சூடானில் இருந்து இந்தியர்களை மீட்க தமிழக அரசு ஒத்துழைப்பு

சூடானில் இருந்து இந்தியர்களை மீட்க தமிழக அரசு ஒத்துழைப்பு

2 mins read

சென்னை: உள்­நாட்­டுப் போரால் சூடா­னில் பதற்­றம் நில­வும் நிலை­யில், அங்கு சிக்­கித் தவிக்­கும் இந்­தி­யக் குடி­மக்­க­ளைத் தாய­கம் அழைத்­து­வ­ரும் "ஆப­ரே­ஷன் காவேரி" மீட்­புப் பணிக்கு தமி­ழக அரசு அனைத்து வகை­யி­லும் ஒத்­து­ழைப்பு வழங்­கத் தயார் நிலை­யில் இருப்­ப­தாக பிர­த­மர் நரேந்­திர மோடிக்கு தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டா­லின் கடி­தம் எழுதி உள்­ளார்.

"சூடா­னில் பாது­காப்­புச் சூழல் சிக்­க­லா­க­வும் கவ­லை­ய­ளிப்­ப­தா­க­வும் இருக்­கிறது. இவ்­வே­ளை­யில் அங்­கி­ருந்து இந்­தி­யர்­கள் விரை­வாக வெளி­யே­று­வ­தற்கு ஏது­வாக இந்­திய விமா­னப்­படை விமா­ன­மும் இந்­தி­யக் கடற்­படை கப்­பல்­களும் அந்­நாட்­டிற்கு அருகே நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது ஆறு­த­ல­ளிக்­கிறது," என்று முதல்­வர் தம் கடிதத்தில் குறிப்­பிட்டு உள்­ளார்.

தமி­ழ­கத்­தைச் சேர்ந்த ஏறக்­கு­றைய 400 பேர் சூடா­னில் சிக்­கி­யுள்­ள­தா­க­வும் அவர்­கள் தாய­கம் திரும்­பு­வ­தற்­கான உத­வி­களை எதிர்­பார்த்து இருப்­பது குறித்­துப் பிர­த­ம­ரின் கவ­னத்­திற்­குத் தாம் கொண்­டு­வர விரும்­பு­வ­தா­க­வும் முதல்­வர் ஸ்டா­லின் கூறி­யி­ருக்­கி­றார்.

சூடா­னில் சிக்­கித் தவிக்­கும் இந்­தி­யர்­க­ளின் முதல் தொகுதி 'ஐஎன்­எஸ் சுமேதா' என்ற கப்­ப­லில் இருக்­கும் நிலை­யில் அவர்­க­ளின் உற­வி­னர்­க­ளி­ட­மி­ருந்து மாநில அர­சுக்கு அவ­சர அழைப்­பு­கள் வந்­து­கொண்­டி­ருப்­ப­தா­கத் திரு ஸ்டா­லின் தனது கடி­தத்­தில் தெரி­வித்­துள்­ளார்.

மீட்பு நட­வ­டிக்கை தொடர்­பில், தமிழ்­நாட்­டைச் சேர்ந்­த­வர்­க­ளைக் குறித்த தக­வல்­க­ளைப் பெறு­வ­தற்­கும், சூடா­னில் அவ­தி­யு­றும் தமி­ழர்­களை விரை­வாக வெளி­யேற்­று­வ­தற்­கும் தேவைப்­படும் அனைத்து உத­வி­க­ளை­யும் வழங்க மாநில அரசு தயார் நிலை­யில் இருப்­ப­தாக அந்தக் ­க­டி­தத்­தில் அவர் உறு­தி அ­ளித்­து உள்­ளார்.

மத்­திய வெளி­யு­றவு அமைச்­சு­ட­னும் சூடா­னில் அமைந்­துள்ள இந்­தி­யத் தூத­ர­கத்­து­ட­னும் இணைந்து செயல்­ப­ட­வும் தமிழ்­நாடு அரசு தயா­ராக இருப்­ப­தா­க­மு­தல்­வ­ரின் கடி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"ஆப­ரே­ஷன் காவேரி" மீட்­புப் பணி சூடா­னில் சிக்­கி­யுள்ள ஏறக்­கு­றைய 3,000 இந்­தி­யர்­களை மீட்­கும் நோக்­கில் மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது. இது­வரை கிட்­டத்­தட்ட 530 பேர் மீட்­கப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவர்­களில் 250 பேர் இந்­திய விமா­னப் படை விமா­னங்­கள் மூல­மா­க­வும் 278 பேர் இந்­தி­யக் கப்­பற்­ப­டை­யின் போர்க் கப்­பல் மூல­மா­க­வும் மீட்­கப்­பட்­ட­னர்.

சூடா­னில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட அவர்­கள் அனை­வ­ரும் சவூதி அரே­பியா கொண்­டு­செல்­லப்­பட்­ட­னர்.