சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் டுவிட்டர் கணக்கிற்கு அந்நிறுவனம் சாம்பல் நிறக் குறியீட்டை
('கிரே டிக்' ) வழங்கியுள்ளது.
டுவிட்டரின் புதிய குறியீட்டு முறையின்கீழ் அரசு அல்லது பன்னாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் அக்குறியீட்டைப் பெறும் தமிழகத்தின் முதல் அரசியல் தலைவர் என்ற சிறப்பு இதன் மூலம் கனிமொழிக்குக் கிடைத்துள்ளது.

