வள்ளலார் முப்பெரும் விழா, ஓராண்டு அன்னதானத்திற்கு ரூ.3.25 கோடி

வள்ளலார் முப்பெரும் விழா, ஓராண்டு அன்னதானத்திற்கு ரூ.3.25 கோடி

1 mins read

சென்னை: வள்­ள­லார் முப்­பெரும் விழா, தொடர் அன்­ன­தானம் இரண்­டை­யும் முன்­னிட்டு தமி­ழக அரசு ரூ.3.25 கோடி மானி­யம் வழங்­கி­யுள்­ளது. அதற்­கான காசோ­லையை விழாக் குழுத் தலை­வர் கிருஷ்­ண­ராஜ் வான­வ­ரா­ய­ரி­டம் முதல்­வர் மு.க. ஸ்டா­லின் வழங்­கி­னார்.

திரு­வ­ருட்­பி­ர­காச வள்­ள­லா­ரின் முப்­பெ­ரும் விழா சென்ற ஆண்டு அக்­டோ­பர் முதல் இவ்­வாண்டு அக்­டோ­பர் வரை 52 வாரங்­க­ளுக்கு முக்­கிய நக­ரங்­களில் கொண்­டாட ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

2022 அக்­டோ­பர் 5ஆம் தேதி நடை­பெற்ற முப்­பெ­ரும் விழா­வின் தொடக்க நிகழ்ச்­சி­யில் முதல்­வர் ஸ்டா­லின் கலந்­து­கொண்டு, 'வள்­ள­லார்-200' இலச்­சினை, அஞ்­சல் உறை, சிறப்பு மலர் ஆகி­ய­வற்றை வெளி­யிட்­டார். 52 வார விழாக்­களில் முதல்­வார நிகழ்ச்­சி­களை­யும் ஆண்டு முழு­வ­தும் அன்­ன­தா­னம் வழங்­கும் நிகழ்­வை­யும் தொடங்கி வைத்­தார்.

அப்­போது தம் உரை­யில் குறிப்­பிட்­ட­வாறு அரசு மானி­யத்தை விழாக் குழு­வி­டம் நேற்று முன்தினம் முதல்வர் வழங்­கி­னார்.