'தமிழக வளர்ச்சிக்கு காவல்துறை உறுதுணையாக உள்ளது'

'தமிழக வளர்ச்சிக்கு காவல்துறை உறுதுணையாக உள்ளது'

2 mins read
0c3c4a7c-9d0f-44fb-a701-dd9b07683d9f
-

முதல்வர்: அமைதியான மாநிலம் என்பதால் தொழில்முனைவர்கள் வருகிறார்கள்

சென்னை: ஒரு மாநி­லத்­தின் நீண்டகால வளர்ச்­சிக்கு சட்­டம் ஒழுங்­கு­தான் மிக முக்­கி­ய­மா­ன­தாக உள்­ளது என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­துக்கு புதிய தொழில் முனை­வோர் வந்­து­கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­றால் அதற்கு மாநி­லத்­தில் அமைதி நில­வு­வ­து­தான் கார­ணம் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

கட­லூர், கள்­ளக்­கு­றிச்சி, விழுப்­பு­ரம் ஆகிய மூன்று மாவட்­டங்­களில் முதல்­வர் ஸ்டா­லின் நேற்று கள ஆய்வு மேற்­கொண்­டார். அப்­போது மூன்று மாவட்­டங்­க­ளி­லும் மேற்­கொள்­ளப்­படும் திட்­டப்­ப­ணி­களை அவர் பார்­வை­யிட்டு அதி­கா­ரி­க­ளுக்கு பல்­வேறு ஆலோ­ச­னை­களை வழங்­கி­னார்.

மேலும், பொது­மக்­க­ளி­டம் இருந்து கோரிக்கை மனுக்­க­ளை­யும் பெற்­றுக்­கொண்ட அவர், மூன்று மாவட்­டங்­களில் காவல் கண்­கா­ணிப்­பா­ளர்­கள், தமி­ழக டிஜிபி சைலேந்­திர பாபு ஆகி­யோ­ரு­டன் ஆலோ­சனை மேற்­கொண்­டார்.

அப்­போது பேசிய அவர், சட்­டம் ஒழுங்­கை­யும் பொது அமை­தி­யை­யும் நிலை­நாட்­டு­வ­தில் தமி­ழக அர­சுக்கு காவல்­துறை உறு­து­ணை­யாக உள்­ள­தா­கப் பாராட்டு தெரி­வித்­தார்.

"அமை­தி­யான மாநி­லத்­தில் சமூக பொரு­ளா­தார வளர்ச்சி ஏற்­படும். அம்­மா­நி­லத்­தில் சட்­டம் ஒழுங்கு முறை­யா­கப் பரா­ம­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு இதுவே சான்­றா­கும். சில சம­யங்­களில் சில பிரச்­சி­னை­க­ளுக்கு நட­வ­டிக்கை எடுக்­கா­விட்­டால் பின்­னர் அவை பெரி­தா­கி­வி­டு­கிறது. அந்­தப் பிரச்­சி­னை­கள் குறித்த செய்­தி­கள் விரை­வாக பரவி விடு­கின்­றன.

"எனவே, சிறு சம்­ப­வங்­கள்­கூட கவ­னிக்­கப்­பட வேண்­டும். இவ்­வி­ஷ­யத்­தில் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

காவல்­து­றை­யி­னர் சமூக ஊட­கங்­க­ளின் வீச்­சை­யும் அவற்­றின் தாக்­கத்­தை­யும் சரி­யாக உணர்ந்து செயல்­பட வேண்­டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

இதற்­கி­டையே, சட்­டம் ஒழுங்கு விவ­கா­ரம் தொடர்­பில் கடும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என­வும் காவல்துறைக்கு முதல்­வர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

முன்­ன­தாக, விழுப்­பு­ரம் ஆட்சி­யர் அலு­வ­ல­கத்­தில் விவ­சா­யி­கள், மீன­வர்­கள், மக­ளிர் குழுக்­­கள், தொழில்முனை­வர் பிர­தி­நிதி­க­ளு­டன் கலந்­தாய்வுக் கூட்­டத்­தில் பங்­கேற்­றார்.

அப்­போது விவ­சா­யி­க­ளுக்கு செயல்­ப­டுத்­தப்­படும் திட்­டங்­க­ளின் வளர்ச்­சிப் பணி­கள் குறித்து கேட்­ட­றிந்த முதல்­வர் மூன்று மாவட்ட தேவை­கள் குறித்து கோரிக்கை மனுக்­களைப் பெற்­றார். அவை மீது உரிய நட­வடிக்கை எடுக்­கப்­படும் என்­றார் அவர்.