பழனிசாமி: பாஜக உடனான கூட்டணி தொடரும்

பழனிசாமி: பாஜக உடனான கூட்டணி தொடரும்

2 mins read

புது­டெல்லி: அதி­முக, பாஜக இடை­யே­யான தேர்­தல் கூட்­டணி நீடிப்­ப­தாக அதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் டெல்­லி­யில் அவர் மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷாவை சந்­தித்­துப் பேசி­னார். அதன் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய பழ­னி­சாமி, தமக்­கும் தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­ம­லைக்­கும் இடையே எந்­த­வித தக­ரா­றும் இல்லை என்­றார். மேலும் அதி­முக, பாஜக இடையே பிரி­வி­னையை உண்­டாக்க சிலர் முயற்சி செய்­வ­தா­க­வும் அவர் சாடி­னார்.

"ஒவ்­வோர் அர­சி­யல் கட்­சி­யும் அத­ன­தன் கொள்­கை­க­ளின் அடிப்­ப­டை­யில் செயல்­ப­டு­கிறது. அதே­போல் ஒற்­று­மை­யா­கச் செயல்­பட்டு எங்­கள் கூட்­ட­ணியை வெற்­றி­பெ­றச் செய்­வோம்," என்­றார் பழ­னி­சாமி.

கோட­நாடு கொலை, கொள்ளை வழக்­கில் அதி­முக அரசு உரிய நட­வ­டிக்கை எடுத்­த­தா­கக் குறிப்­பிட்ட அவர், அதி­முக உட்­கட்சி விவ­கா­ரம் தொடர்­பில் தேர்­தல் ஆணை­யம் முழு­மை­யான தீர்ப்பை வழங்­கி­விட்­டது என்­றார்.

"மேலும், நீதி­மன்­ற­மும் தெளி­வான தீர்ப்பை வழங்­கி­விட்­டது. அதி­முக எங்­க­ளி­டம்­தான் உள்­ளது. துரோ­கம் செய்­ப­வர்­க­ளுக்கு கட்­சி­யில் மீண்­டும் இடம் கிடை­யாது," என்­றார் பழ­னி­சாமி.

அதி­முக தலை­மைக்­கும் தமி­ழக பாஜ­க­வுக்­கும் இடையே அண்­மைக்­கா­ல­மாக கருத்து வேறு­பா­டு­கள் நிலவி வந்­தன.

இரு­த­ரப்­புக்­கும் இடையே வார்த்­தைப் போரும் நீடித்­தது. இந்­நி­லை­யில் மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா உட­னான சந்­திப்­புக்­குப் பிறகு கூட்­டணி நீடிக்­கும் என எடப்­பாடி பழ­னி­சாமி அறி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் அதி­மு­க­வில் பாஜ­க­வுக்கு 20 இடங்­கள் ஒதுக்க வேண்­டும் என மத்­திய அமைச்­சர் அமித் ஷா கேட்­டுக்­கொண்­ட­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது.

எனி­னும், அவ்­வ­ளவு தொகு­தி­களை ஒதுக்க இய­லாது என அதி­முக தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல் கூறு­கிறது. இரு தரப்­புக்­கும் இடையே தொகுதி பங்­கீடு குறித்து தொடர் பேச்­சு­வார்த்தை நடப்­ப­தா­கத் தெரி­கிறது.