சென்னை: இதுவரை நிகழ்ந்திராத சாதனையாக இணையம் வழி 1,110 கோடி ரூபாய்க்கு மேல் வரி வசூலித்துள்ளளது சென்னை குடிநீர் வாரியம்.
இணையம் வழி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதே இதற்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக, 15 மண்டலங்களில் குழாய், லாரி மூலம் நாள்தோறும் நூறு கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.