உருவ ஒற்றுமை கொண்ட இரண்டு வேட்பாளர்களால் குழப்பம்

உருவ ஒற்றுமை கொண்ட இரண்டு வேட்பாளர்களால் குழப்பம்

1 mins read
176b379c-9fa7-44c1-8f50-5c66f3d80ea3
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக சட்­டப்­பேரவைத் தேர்­த­லில் ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இரண்டு வேட்­பா­ளர்­க­ளால் வாக்­கா­ளர்­கள் குழப்­பம் அடைந்­துள்­ள­னர்.

ராய்ச்­சூர் மாவட்­டம், மாஸ்கி தொகு­தி­யில் பாஜக சார்­பில் 68 வய­தான முன்­னாள் எம்­எல்ஏ பிர­தாப் கவுடா பட்­டீ­லும் அவரை எதிர்த்து காங்­கி­ரஸ் சார்­பில் பச­வ­ன­க­வுடா துர்­வி­கா­லும் போட்டி­யிடு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் சுயேச்சை வேட்­பா­ள­ராக ஈஷப்பா என்­ப­வ­ரும் கள­மி­றங்கி உள்­ள­து­டன் தமது பெய­ரை­யும் ஈஷப்பா கவுடா பட்­டீல் என மாற்­றி­யுள்­ளார்.

இவ­ரைப் பார்க்க அச்சு அச­லாக பாஜக வேட்­பா­ளர் பிர­தாப் கவுடா பட்­டீல் போன்று இருப்­ப­தாக பல­ரும் தெரி­வித்­துள்­ள­னர்.

இரு­வ­ருமே நெற்­றி­யில் திரு­நீறு பூசி, கண்­ணா­டி­யும் அணிந்துள்­ள­னர். மீசை­யும் கிட்­ட­த்தட்ட ஒரே மாதிரி இருப்­ப­தால் பாஜக தரப்பு அதிர்ச்சி அடைந்­துள்­ளது.

வாக்­கா­ளர்­கள் குழப்­ப­ம­டைந்­தால் வாக்­கு­கள் சித­றி­வி­டும் என்­பதே பாஜ­க­வின் கவ­லை. பிர­தாப் கவுடா பட்­டீ­லைத் தோற்­க­டிக்க அவரைப் போல் முக­தோற்­றம் கொண்ட ஈஷப்­பாவை களமிறக்கி காங்­கி­ரஸ் கட்சி வேடிக்கை பார்ப்­ப­தாக பாஜ­க சாடியுள்ளது.