சென்னை: தமிழக அரசின் இணைய வழி சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும் இந்த மனு தொடர்பாக இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இணைய வழி விளை யாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

