டெல்லியில் அதிபர் முர்முவுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் அதிபர் முர்முவுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

2 mins read
71f474e9-5593-4c3f-bea4-eeb95db4f891
-

புது­டெல்லி: டெல்லி சென்­றுள்ள தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அங்கு அதி­பர் திரௌ­பதி முர்­முவை நேரில் சந்­தித்­துப் பேசி­னார். அப்­போது சென்­னை­யில் ரூ.230 கோடி மதிப்­பீட்­டில் கட்­டப்­பட்­டுள்ள பன்­னோக்கு உயர்­ சிறப்பு மருத்­து­வ­ம­னையை திறந்து வைக்­கு­மாறு அதி­ப­ருக்கு அவர் அழைப்பு விடுத்­தார்.

இந்த மருத்­து­வ­ம­னை­யில் பல்­வேறு சிறப்பு சிகிச்­சை­கள் அளிக்­கப்­படும் என்­றும் அதற்­கேற்ப நவீன மருத்­துவ வச­தி­கள் செய்­யப்­பட்­டுள்­ளன என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், நேற்று காலை டெல்லி சென்ற முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அங்கு அதி­பர் திரௌ­பதி முர்­மு­வைச் சந்­தித்­துப் பேசி­ய­போது, மருத்­து­வ­மனை திறப்பு விழா­வில் பங்­கேற்க வரு­மாறு அழைப்பு விடுத்­தார்.

இந்த அழைப்பை அதி­பர் திரௌ­பதி முர்மு ஏற்­றுக்­கொண்­ட­தாக தமி­ழக அரசு வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எதிர்­வ­ரும் ஜூன் 5ஆம் தேதி மருத்­து­வ­மனை திறப்பு விழா நடை­பெற உள்­ளது. சென்னை கிண்டி பகு­தி­யில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்­றும் ஆராய்ச்சி நிலைய வளா­கத்­தில் ஆயி­ரம் படுக்­கை­க­ளு­டன் கூடிய, சுமார் 51,429 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் தரைத்­த­ளம், ஆறு மாடி­க­ளு­டன் உரு­வாகி உள்­ளது பன்­னோக்கு உயர்­சி­றப்பு மருத்­து­வ­மனை.

மேலும், சென்­னை­யில் காலஞ்­சென்ற முதல்­வர் மு.கரு­ணா­நிதி நூற்­றாண்டு தொடக்க விழா­வும் நடை­பெ­று­கிறது.

இந்த இரு நிகழ்­வு­க­ளி­லும் இந்­திய அதி­பர் பங்­கேற்க உள்­ள­தாக தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

முன்­ன­தாக, அதி­பரை நேரில் சந்­திக்­கும்­போது தமி­ழக சட்­டப்­பே­ரவையில் நிறை­வேற்­றப்­படும் மசோ­தாக்­கள் தொடர்­பில் ஆளு­நர் விரைந்து முடி­வெ­டுக்க அறி­வுறுத்த வேண்­டும் எனக் கூறி, முதல்­வர் ஸ்டா­லின் கேட்­டுக்­கொள்­வார் என்று தக­வல் வெளி­யாகி இருந்­தது.

ஆனால், இது குறித்து தமி­ழக அர­சின் செய்­திக்­கு­றிப்­பில் விவ­ரங்­கள் ஏது­மில்லை.

இத­னி­டையே, டெல்லி விமான நிலை­யத்­தில் மத்­திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மனை தற்­செ­ய­லா­கச் சந்­தித்­தார் முதல்­வர் ஸ்டாலின். இரு­வ­ரும் சிறிது நேரம் பேசிக்­கொண்­டி­ருந்­த­னர்.

இருவரும் என்ன பேசினர் என்பது குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

முன்­ன­தாக, டெல்லி சென்ற தமி­ழக முதல்­வ­ருக்கு அங்கு சிறப்­பான வர­வேற்பு அளிக்­கப்­பட்டது.

பன்னோக்கு மருத்துவமனை தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பு