பாஜக பிரமுகர் ஓடஓட துரத்திப் படுகொலை; பதற்றம்

பாஜக பிரமுகர் ஓடஓட துரத்திப் படுகொலை; பதற்றம்

2 mins read
3ec9aa8c-0f9a-4fdf-a53f-fb99e7e4987c
-

காஞ்­சி­பு­ரம்: பாஜக பிர­மு­கர் படு­கொலை செய்­யப்­பட்­டதை அடுத்து சென்­னை­யின் புற­ந­கர்ப் பகு­தி­யில் பதற்­றம் நிலவி வரு­கிறது. இதை­ய­டுத்து குற்­ற­வா­ளி­க­ளைப் பிடிக்க காவல்­துறை ஒன்­பது தனிப்­ப­டை­களை அமைத்­துள்­ளது.

காஞ்­சி­பு­ரம் மாவட்­டத்­தில் உள்ள வளர்­பு­ரம் ஊராட்சி மன்­றத் தலை­வ­ராக இருந்­த­வர் பிபி­ஜிடி சங்­கர். இவர் பாஜ­க­வின் பிற்­படுத்­தப்­பட்­டோர் பட்­டி­ய­லின அணி­யின் பொரு­ளா­ள­ரா­க­வும் பொறுப்­பில் இருந்து வந்­தார்.

நேற்று முன்­தி­னம் பெங்­க­ளூரு தேசிய நெடுஞ்­சாலை வழி­யாக தன் வீட்­டுக்­குச் சென்று கொண்­டி­ருந்­தார் சங்­கர். அப்­போது நசரத்­பேட்டை என்ற பகு­தி­யில் அவரது காரை தடுத்து நிறுத்­திய மர்­மக் கும்­பல் ஒன்று கார் மீது நாட்டு வெடி­குண்­டு­களை வீசி­யுள்­ளது. இதில் அந்­த கார் பலத்த சேத­ம­டைந்த நிலை­யில், சிறிது தூரம் சென்று நின்­று­விட்­டது.

உயி­ரைக் காப்­பாற்­றிக்­கொள்ள பிபி­ஜிடி சங்­கர் காரில் இருந்து இறங்கி தப்­பி­யோ­டி­னார். எனி­னும் அக்­கும்­பல் அவரை விடா­மல் துரத்­திச் சென்­றது.

திரைப்படத்தில் இடம்­பெ­றும் துரத்­தல் காட்­சி­யைப் போல், மக்­கள் நட­மாட்­டம் உள்ள பகு­தி­யில் அந்­தக் கும்­பல் விரட்­டி­ய­தாக சம்­ப­வத்தை நேரில் பார்த்­த­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

உயி­ரைக் காப்­பாற்­றிக்­கொள்ள தலை­தெ­றிக்க ஓடிய சங்­கரை திடீ­ரென எதிரே தோன்­றிய மற்­றொரு கும்­பல் பயங்­கர ஆயு­தங்­க­ளால் வெட்­டிச் சாய்த்­தது.

இதில் படு­கா­ய­ம­டைந்த சங்­கர் அந்த இடத்­தி­லேயே ரத்த வெள்­ளத்­தில் சரிந்து உயி­ரி­ழந்­தார்.

பின்­னர் அக்கும்­பல் அங்­கி­ருந்து தப்­பிச்­சென்­றது. தனிப்­படை­கள் அமைக்­கப்­பட்டு விசா­ரணை தொடங்­கி­யுள்ள நிலை­யில், தொழில் போட்டி கார­ண­மாக சங்­கர் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு பிபி­ஜிடி குமரன் என்ற தொழி­ல­தி­பர் கொலை செய்­யப்­பட்­டார்.

இந்­நி­லை­யில் கும­ர­னின் நெருங்கிய உற­வி­னர் பிபி­ஜிடி சங்­க­ரும் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்.

சங்­கர் மீது பதி­னைந்­துக்­கும் மேற்­பட்ட வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ள­தாக காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.