அரசு: மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை

அரசு: மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை

1 mins read

சென்னை: மாநி­லத்­தில் உள்ள அனைத்து அரசு மருத்­து­வ­மனை­க­ளி­லும் மருத்­துவ கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்த பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக மக்கள் நல்வாழ்வு, மருத்துவ அமைச்­சர் மா.சுப்­பி­ர­மணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

எழும்­பூர் அரசு குழந்­தை­கள் நல மருத்­து­வ­ம­னை­யில் சிறு­நீ­ர­கம், கல்­லீ­ரல், எலும்பு மஜ்ஜை உள்­ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்­சை­க­ளுக்கு தனிப்­பி­ரிவு ஏற்­ப­டுத்த ரூ.57.30 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் இப்­பணி மிக விரை­வில் தொடங்­கப்­பட உள்­ளது என்­றும் அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் குறிப்­பிட்­டார்.

"ஆந்­திரா, கர்­நா­டகா, கேரளா உள்ளிட்ட மாநி­லங்­களில் இருந்து சிறந்த மருத்­து­வச் சேவையை பெறு­வ­தற்கு பலர் தமிழ்­நாட்­டிற்கு படை­யெ­டுத்து வரு­கி­றார்­கள்.

"எனவே, தமிழகத்தில் மருத்­துவ கட்­ட­மைப்புகள் தொடர்ச்­சி­யாக மேம்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்றன.

"அந்த வகை­யில், நிதி­நிலை அறிக்­கை­யில் குறிப்­பிட்­ட­படி சென்னை ராஜீ­வ்காந்தி அரசு மருத்­து­வ­ம­னை­யில் நரம்­பி­யல் துறைக்­குப் புதிய கட்­ட­டம் கட்டு­வ­தற்கு ரூ.65 கோடி­யும் கீழ்ப்­பாக்­கம் மருத்­து­வக்­கல்­லூரி மருத்து­வ­ம­னை­யில் புதுக் கட்­ட­டம் கட்­டு­வ­தற்கு ரூ.125 கோடி­யும் நிதி ஒதுக்­கப்­பட்டு உள்­ளது," என்று குறிப்­பிட்ட அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் மேலும் பல அரசு மருத்­து­வ­ம­னை­களில் மேற்­கொள்­ளப்­பட இருக்­கும் மேம்­பாட்­டுப் பணி­க­ளைப் பட்­டி­ய­லிட்­டார்.

தமி­ழ­கத்­தில் போதைப்­பொ­ருள்­கள் விற்­பனை தொடர்­பான தக­வல் தெரி­விப்­ப­வர்­க­ளின் விவ­ரங்­களை ரக­சி­ய­மாக வைத்­துக்­கொண்டு புகார்­கள் மீது தீவிர நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அமைச்சர் மேலும் குறிப்­பிட்டார்.