தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு: வலுக்கும் எதிர்ப்பு

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு: வலுக்கும் எதிர்ப்பு

1 mins read

சென்னை: கர்­நா­ட­கா­வில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் தமிழ்த்­தாய் வாழ்த்து அவ­ம­திக்­கப்­பட்­ட­தாக செய்தி வெளி­யா­னதை அடுத்து, தமி­ழக அர­சி­யல் பிர­மு­கர்­கள் உள்­ளிட்ட பலர் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

சிவ­மோகா பகு­தி­யில் தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை தலை­மை­யில் நடை­பெற்ற தமிழ் வாக்­கா­ளர்­கள் மாநாட்­டில் தமிழ்த்­தாய் வாழ்த்து இசைக்­கப்­பட்­டது. அப்­போது மேடை­யில் இருந்த கர்­நா­டக பாஜக நிர்­வாகி ஈஸ்­வ­ரப்பா குறுக்­கிட்டு, தமிழ்த்­தாய் வாழ்த்தை பாதி­யில் நிறுத்­தி­யுள்­ளார்.

இதற்கு கண்­ட­னம் தெரி­வித்­துள்ள பாமக நிறு­வ­னத் தலை­வர் ராம­தாஸ், தமிழ்த்­தாய் வாழ்த்தை அவ­ம­தித்த விழா அமைப்­பா­ளர்­கள் மன்­னிப்புக் கேட்க வேண்­டும் என வலியுறுத்தி உள்­ளார்.

தமிழ்த்­தாய் வாழ்த்தை இழிவு­ப­டுத்­தும் தனது கட்­சிக்­கா­ரர்­க­ளைத் தடுக்க முடி­யாத அண்­ணா­மலை, தமிழ் மக்­க­ளைப் பற்றி எப்­படி கவ­லைப்­ப­டு­வார் என திமுக எம்பி கனி­மொழி சமூக ஊட­கப் பதி­வில் கேள்வி எழுப்­பி­யுள்­ளார். கர்­நா­ட­கா­வில் நடந்த நிகழ்ச்­சி­யில் தமிழ்த்­தாய் வாழ்த்து பாதி­யில் நிறுத்­தப்­பட்­ட­தைக் கண்டு இடி­வி­ழுந்த மண்­கு­ட­மாய் இத­யம் நொறுங்­கி­ய­தாக கவி­ஞர் வைர­முத்து கூறியுள்ளார்.

இத­னி­டையே, அக்­கு­றிப்­பிட்ட நிகழ்ச்­சி­யில் என்ன நடந்­தது என்­பது குறித்து அண்­ணா­மலை விளக்­கம் அளித்­துள்­ளார்.

"ஒவ்வொரு மாநி­லத்­துக்­கும் உரிய மாநில கீதத்­தைப் பாடிய பிறகே மற்ற மாநி­லத்­தின் வாழ்த்­துப்­பா­டல் இசைக்­கப்­படும் என்­பது நியதி. அதைத்­தான் பாஜக நிர்­வாகி ஈஸ்­வ­ரப்பா சுட்­டிக்­காட்டி­னார்," என்று அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார்.