சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் காண விரும்பிய தமிழகமாக இன்று எழுந்து நிற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பாரதிதாசனின் 133வது பிறந்த நாளை முன்னிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழ் வளரவும் தமிழர் உயரவும் பாவேந்தர் உணர்ச்சியூட்டி முற்போக்காய்ப் பாப்புனைந்த தாகக் குறிப்பிட்டுள்ளார்.
"துறைதோறும் தமிழ் வளர்ச்சி, பெண் கல்விக்கான திட்டங்கள், பல மொழிபெயர்ப்புத் திட்டங்கள் எனப் பாவேந்தர் காண விரும்பிய தமிழ்நாடாக இன்று எழுந்து நிற்கிறோம்," என்று முதல்வர் கூறியுள்ளார்.
முன்னதாக, அரசு சார்பில் பாரதிதாசன் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.