கடல் நடுவே ரூ.81 கோடியில் 'கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்'; சீமான் எதிர்ப்பு

2 mins read

சென்னை: சென்னை மெரீனா கடற்­க­ரை­யில் கட­லுக்கு நடுவே 'கரு­ணா­நிதி பேனா நினை­வுச் சின்­னம்' அமைக்க மத்­திய அரசு அனு­மதி அளித்­துள்­ளது. நினை­வுச் சின்­னம் மொத்­தம் 8,551.13 சதுர மீட்டா் பரப்­ப­ள­வில் ரூ.81 கோடி­யில் நிறு­வப்­ப­டு­கிறது.

கடற்­க­ரை­யி­லி­ருந்து 360 மீ. தொலை­வில் அமை­ய­வுள்ள பேனா சின்­னத்­தின் உய­ரம் 42 மீ. அதைச் சுற்றி தோட்­டங்­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

நினை­வுச் சின்­னத்தை நோக்கி அமைக்­கப்­ப­ட­வுள்ள பாலம், தரைப் பகு­தி­யில் 290 மீ. நீளத்­தி­லும், கட­லுக்கு மேல் 6 மீ. உய­ரத்­தில் 360 மீ. நீளத்­தி­லும் அமைக்­கப்­படும். ஆக மொத்­தம் 650 மீ. நீளம் கொண்ட அந்த பாலத்­தின் அக­லம் 7 மீட்­ட­ரா­கும். அதில் 3 மீ. கண்­ணா­டி­யா­லான தள­மா­கும்.

நினை­வுச் சின்­னத்தை அமைப்­ப­தற்­கான கருத்­து­ருக்­களுக்கு தமிழ்­நாடு கட­லோர மண்­டல மேலாண்மை ஆணை­யம் உரிய வழி­காட்­டு­தல்­களை வழங்­கி­யுள்­ளது. நினை­வுச் சின்­னம் அமைக்க மாநில கட­லோர மண்­டல மேலாண்மை ஆணை­யம் அனு­மதி அளித்­து­விட்ட நிலை­யில் மத்­திய அர­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட்டு, கடந்த அக்­டோ­பர் மாதம் அனு­மதி கிடைத்து.

திட்­டம் குறித்து பொது­மக்­க­ளின் கருத்­து­க­ளைக் கேட்டு மாசுக்­கட்­டுப்­பாட்டு வாரி­யம், சுற்­றுச்­சூழல் அனு­மதி பெற்று அடுத்த கட்ட பணி­யைத் தொடங்க மத்­திய அரசு அனு­மதி அளித்­தது.

இந்­நி­லை­யில், தமிழ்­நாடு அரசு தாக்­கல் செய்த சுற்­றுச்­சூழல் தாக்க மதிப்­பீட்டு ஆய்­வ­றிக்­கையை ஏற்று மத்­திய அர­சின் சுற்­றுச்­சூ­ழல் நிபு­ணர் மதிப்­பீட்­டுக் குழு நிபந்­த­னை­க­ளு­டன் மத்­திய அரசு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

சீமான் எதிர்ப்பு

இதற்­கி­டையே, நினை­வுச் சின்­னம் அமைக்க மத்­திய அரசு அனு­மதி அளித்­துள்­ளதை எதிர்த்து சட்­டப்­போ­ராட்­டம் நடத்­தப்­படும் என்று நாம் தமி­ழர் கட்சி தலைமை ஒருங்­கி­ணைப்­பா­ளர் சீமான் தெரி­வித்­துள்­ளார்.

"விதி­க­ளுக்­குப் புறம்­பாக மத்­திய நிபு­ணர் குழு­வி­னர் அனு­மதி அளித்­தி­ருப்­பது மக்­க­ளாட்சி முறைக்கு எதி­ரான செயல்.

"சூழலி­ய­லுக்கு எதி­ரான மாநில அர­சின் இத்­திட்­டத்­திற்கு மத்­திய அர­சின் குழு விரைந்து அனு­மதி அளித்­துள்­ளது அவர்­களின் ஒருங்­கி­ணைந்த மக்­கள் விரோ­தப் போக்­கி­னைக் காட்­டு­கிறது," என்று அவர் கூறி­யுள்­ளார். மக்­கள் கருத்­துக் கேட்­புக் கூட்­டம் முறை­யாக நடை­பெ­ற­வில்லை என்­ப­த­னை எடுத்­துக்­கொள்­ளாது அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருப்­பது மக்­க­ளின் கருத்­தினை மத்­திய, மாநில அர­சு­கள் துளி­யும் மதிப்­ப­தில்லை என்­ப­தனை வெளிச்­சம் போட்­டுக் காட்­டு­கிறது என்­றும் சீமான் தெரி­வித்­துள்­ளார்.