சென்னை: திமுக எம்.பி. கனிமொழி, ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சொத்துப் பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை மன்னிப்புக் கேட்கக் கனிமொழி வலியுறுத்தி யுள்ளார். மேலும், தனியார் தொலைக்காட்சியில், தமக்கு ரூ.800 கோடிக்குச் சொத்து இருப்பதாகக் கூறப்பட்ட புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று அவர் கூறியுள்ளார்.
அவதூறு பரப்பும் காணொளியை வெளியிட்டதன் மூலம் இந்தியத் தண்டனைச் சட்டம் 499, 500 பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்தவர் ஆகிறீர்கள். காணொளியை 48 மணி நேரத்தில் திரும்பப் பெற்றுக் கொண்டு, அனைத்து சமூகத் தளங்களிலும் அகற்றி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

