திமுகவுடன் இணைப்பில்லை: மதிமுக தலைமை விளக்கம்

திமுகவுடன் இணைப்பில்லை: மதிமுக தலைமை விளக்கம்

1 mins read

சென்னை: மதி­மு­கவை, தாய்க் கழ­க­மான திமு­க­வு­டன் இணைத்து விட­லாம் என்று வைகோ­விற்கு அக்­கட்­சி­யின் அவைத் தலை­வர் துரை­சாமி கடி­தம் எழு­திய நிலை­யில், மதிமுக தலைமைக் கழ­கச் செயலா­ளர் துரை வைகோ இணைப்பு இல்லை என்று விளக்­கம் அளித்­துள்­ளார்.

மதி­முக அவைத்­த­லை­வர் திருப்­பூர் துரை­சாமி, கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் வைகோ­வுக்கு எழு­திய கடி­தத்­தில், தங்­க­ளது அண்­மைக் கால நட­வடிக்­கை­க­ளால் மதி­மு­க­விற்கு மக்கள் மத்­தி­யில் அவப்­பெ­யர் ஏற்­பட்­டுள்­ள­தாக விமர்­சித்­துள்ளார்.

சந்­தர்ப்­ப­வாத சுய­நல அர­சி­ய­லுக்கு தாங்­களும் அப்­பாற்­பட்­ட­வர் இல்லை என்­ப­தனை அறிந்த கட்சி உறுப்­பி­னர்­கள், தங்­க­ளைப் புதுப்­பித்­துக்கொள்ள முன்­வராத நேரத்­தில் புதிய உறுப்­பினர்­களைச் சேர்ப்­ப­தில் கட்சி நிர்­வா­கி­க­ளி­டம் தொய்வு ஏற்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

மகனை ஆத­ரித்து, அர­வணைப்­ப­தும் தங்­க­ளின் சந்தர்ப்­ப­வாத அர­சி­ய­லும் தமிழ்­நாடு மக்­களை எள்ளி நகை­யாட வைத்­து­ விட்­டது என்­பதை தாங்­கள் இன்­ன­மும் உண­ரா­மல் இருப்­பது வருத்­த­ம­ளிப்­ப­தாக அவர் கூறி­யுள்ளார்.

பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தவே திருப்­பூர் துரை­சாமி கடி­தம் எழுதி­யி­ருப்­ப­தா­க­வும், அவ­ரது குற்­றச்­சாட்­டில் துளி அள­வும் உண்மை இல்லை என்­றும் மதி­முக தலை­மைக் கழ­கச் செய­லா­ளர் துரை வைகோ விளக்­க­ம­ளித்­துள்­ளார்.

மேலும், திமு­க­வு­டன் மதி­மு­கவை இணைப்­ப­தில் கட்­சி­யி­ன­ருக்­குத் துளி­யும் உடன்­பாடில்லை என்று கூறி­யுள்­ளார்.

தொடர்ந்து, திமுக கூட்­ட­ணி­யில் இருந்­தா­லும் மதி­மு­க­வுக்கு என்று தனிப்­பட்ட கொள்கை உள்­ளது. மனக்­க­சப்பு கார­ண­மாக திமுக- மதி­முக இணைப்பு என அவைத்­த­லை­வர் துரை­சாமி கடி­தம் எழு­தி­ய­தா­க­வும், மூத்த நிர்­வாகி என்ற மரி­யாதை கார­ண­மாக துரை­சாமி மீது நட­வ­டிக்கை இல்லை என்­றும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.