டெல்டா பகுதிகளில் கரியமில வாயு வெளியேற்றம் குறித்து ஆய்வு

2 mins read

சுற்றுச்சூழல் அமைச்சர் தகவல்; கால நிலை மாற்ற பாதிப்புகளைத் தவிர்க்க நடவடிக்கை

கோவை: கால­நிலை மாற்ற பாதிப்பு­க­ளைத் தவிர்க்க தமி­ழக அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக சுற்­றுச்­சூ­ழல் அமைச்­சர் மெய்­ய­நா­தன் தெரி­வித்­துள்­ளார்.

இந்தியாவில் கால­நிலை மாற்­றத்­தால் தமி­ழ­கம், ஆந்­திரா ஆகிய இரு மாநி­லங்­கள்­தான் அதிக பாதிப்­பு­களை எதிர்­கொண்­டுள்­ள­தாக கோவை­யில் நடை­பெற்ற சுற்­றுச்­சூ­ழல் தொடர்­பான கருத்­த­ரங்­கில் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

மேலும், டெல்டா மாவட்­டங்­களில் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றம் தொடர்­பாக ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கவும் இதற்­காக தனிக்­குழு ஒன்று அமைக்­கப்­பட்­டுள்ளதாக­வும் அமைச்­சர் கூறி­னார்.

"மின்­சார வாரி­யம், போக்கு­வரத்து, தொழில்­துறை ஆகி­ய­வற்­றின் செயல்­பா­டு­க­ளால்­தான் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றம் அதி­க­ரிக்­கிறது.

"உல­க­ள­வில் சீனா, அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு­கள்தான் அதிக அள­வில் கரி­ய­மில வாயுவை வெளி­யேற்­று­கின்­றன.

"இந்­தப் பட்­டி­ய­லில் இந்­தியா ஐந்­தா­வது இடத்­தில் உள்­ளது. கார்­பன் சம­நிலை என்ற இலக்கை எளி­தில் அடைய முடி­யாது," என்றார் அமைச்­சர் மெய்­ய­நா­தன்.

ராமே­சு­வ­ரம், ராஜ­பா­ளை­யம் ஆகிய இரண்டு நக­ராட்­சி­களில் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றம் தொடர்­பாக நிர்­ண­யிக்­கப்பட்டுள்ள இலக்கை எட்ட திட்­டங்­கள் தொடங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தி­லும் அடுத்­த ­கட்ட பணி­களைத் தொடங்க திட்­ட­மிட்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

"டெல்டா மண்­ட­லத்­தில் உள்ள ஐந்து மாவட்­டங்­களில் கார்­பன் வெளி­யேற்­றம் குறித்து ஆய்வு மேற்­கொள்­ளப்­படும்.

"எனது சொந்த ஊரில் வெப்­பம் 105 டிகி­ரியை எட்­டி­யுள்­ளது. என் வாழ்­நா­ளில் இவ்­வளவு வெப்­பத்தை இதற்கு முன் பார்த்­த­தில்லை. தமி­ழ­கத்­தில் வெப்பத்தைத் தணிக்­கும் நட­வடிக்­கை­களில் ஒன்­றாக ஆண்­டுக்கு 10 கோடி மரங்­களை நடவு செய்ய இலக்கு வைத்­துள்­ளோம்.

"2050க்குள் கார்­பன் சம­நிலை என்ற அடிப்­ப­டை­யில் இந்தக் கருத்­த­ரங்­கம் நடை­பெற்று வரு­கிறது.

"பொது இடங்­களில் மரங்­களை நடு­வது, போக்­கு­வ­ரத்­து­களில் ஏற்­ப­டக்­கூ­டிய கார்­பன் குறைப்பு, நீர்நிலை­க­ளைப் பாது­காப்­பது ஆகிய தலைப்­பு­களில் கருத்­த­ரங்­கம் நடத்­து­வ­து­டன் அவற்­றைச் செயல்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும்," என்­றார் அமைச்­சர் மெய்­ய­நா­தன்.