மது வாங்கித் தராததால் சமைக்க மறுத்த மனைவி; வெட்டிக்கொன்ற கணவர்

1 mins read

திரு­வள்ளூர்: மது வாங்­கித் தராத கண­வ­ரி­டம் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்ட மனைவி வெட்­டிக் கொல்­லப்­பட்­டார். இந்தச் சம்பவம் திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் நிகழ்ந்­தது.

கும்­மி­டிப்­பூண்­டி­யைச் சேர்ந்­த­வர் தர்­மய்யா. இவர் தன் மனைவி லட்­சு­மி­யு­டன் அங்கு வசித்து வந்­தார்.

கண­வன், மனைவி இரு­வருக்­கும் தின­மும் மது அருந்தும் பழக்­கம் இருந்­துள்­ளது. இந்­நிலை­யில் கடந்த 22ஆம் தேதி லட்­சுமி திடீ­ரென மாய­மா­னார். அவ­ருக்கு என்­ன­வா­னது என்று தெரி­யாத நிலை­யில், கடந்த 27ஆம் தேதி தனி­யார் மாந்­தோப்பு ஒன்­றில் லட்­சுமி சட­லம் கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

காவல்­துறை இது­கு­றித்து விசா­ரணை மேற்­கொண்ட நிலை­யில், தர்­மய்யா தலைமறைவானார். காவல்­து­றை­யி­னர் அவரைத் தீவி­ர­மா­கத் தேடி­வந்­த­னர்.

இந்­நி­லை­யில், ஆந்­தி­ரா­வில் வைத்து அவ­ரைத் தனிப்­ப­டை­யினர் கைது செய்­த­னர்.

விசா­ர­ணை­யில் கண­வ­ரும் மனை­வி­யும் தின­மும் இணைந்து மது அருந்தும் பழக்­கம் இருந்­தது தெரி­ய­வந்­தது.

சம்­ப­வத்­தன்று லட்­சு­மிக்கு மது வாங்­கித் தரா­மல் தர்­மய்யா மட்­டும் குடித்­துள்­ளார். இத­னால் மறு­நாள் லட்­சுமி வீட்­டில் சமைக்க­வில்லை. இத­னால் இரு­வருக்கும் இடையே வாக்­கு­வா­தம் மூண்­டுள்­ளது.

அப்­போது லட்­சுமி வீட்­டில் இருந்த பூச்சி மருந்தைக் குடித்­துள்­ளார். எனி­னும் ஆத்­தி­ரம் குறை­யாத நிலை­யில் தர்­மய்யா, வீட்­டில் இருந்த அரி­வா­ளைக் கொண்டு தாக்­கி­ய­தில் லட்­சுமி ரத்த வெள்­ளத்­தில் சரிந்து உயி­ரி­ழந்­தார். அதன் பின்னர் அவரது உடலை மாந்தோப்பில் புதைத்துவிட்டு தர்மய்யா தலைமறைவாகி உள்ளார்.