தேர்தல் கணக்கு தாக்கல் செய்யாத ஆறு பேருக்குத் தடை

தேர்தல் கணக்கு தாக்கல் செய்யாத ஆறு பேருக்குத் தடை

1 mins read

சென்னை: தேர்­தல் செல­வுக் கணக்கை முறைப்­படி தாக்­கல் செய்­யாத மக்­கள் நீதி மய்­யம் கட்சி வேட்­பா­ளர் உள்­பட 6 பேருக்கு மூன்று ஆண்­டு­கள் தேர்­த­லில் நிற்க தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்­தல் ஆணை­யத்­தின் தடை உத்­த­ரவு தமி­ழக அர­சி­த­ழில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

தேர்­த­லில் போட்­டி­யி­டும் அனைத்து வேட்­பா­ளர்­களும் மக்­கள் பிர­தி­நி­தித்­துவ சட்­டப்­படி தேர்­தல் செலவுக் கணக்கை இந்­திய தேர்­தல் ஆணை­யத்­தி­டம் தாக்­கல் செய்ய வேண்­டும்.

குறிப்­பிட்ட காலக்­கெ­டு­வுக்­குள் கணக்கை தாக்­கல் செய்­யா­விட்­டால் இவ்­வாறு தடை விதிக்­கப்­படும்.

இந்­நி­லை­யில் கடந்த 2021ஆம் ஆண்டு தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு தேர்­தல் செலவுக் கணக்கை காட்­டாத சங்­க­ரன்­கோ­வில் தொகுதி மக்­கள் நீதி மய்­யம் கட்சி வேட்­பா­ளர் பிரபு உள்­ளிட்ட ஆறு பேருக்கு தேர்­தல் ஆணை­யம் தடை­வி­தித்­துள்­ளது.

இவர்­களில் ஒரு­வர் அதி­மு­கவைச் சேர்ந்­த­வர். மற்ற நால்­வ­ரும் சுயேச்­சை­கள் ஆவர்.