1,650 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

1,650 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

1 mins read

சென்னை: சென்னை பெர­வள்­ளூர் பகுதி அருகே சாலை­யில் போக்­கு­வ­ரத்­துக் காவல்­து­றை­யினர் சோதனை மேற்­கொண்­ட­னர். அப்­போது தமிழ் நாடு அர­சால் தடை­செய்­யப்­பட்ட குட்கா புகை­யி­லைப் பொருள்­கள் சரக்கு வாக­னம் ஒன்­றில் வைத்­துக் கடத்­தப்­ப­டு­வது கண்­டு­பி­டிக்­கப்­­பட்­டது. அந்த சரக்கு வாக­னத்­தில் 50 சாக்கு மூட்­டை­கள் அடுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

அந்த மூட்டைகளில் கிட்டத்தட்ட 1,650 கிலோ எடையுள்ள குட்கா புகை­யி­லைப் பொருள்­கள் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்­தது தெரிய வந்­தது. அவற்றை காவல்­து­றை­யி­னர் பறி­மு­தல் செய்­த­னர்.

அது தொடர்­பாக கொடுங்­கை­யூர் எழி­ல்ந­க­ரைச் சேர்ந்த 55 வயது செல்­லப்பா என்­ப­வ­ரை­யும் 42 வய­தா­கும் சசி­கு­மார் என்­ப­வ­ரை­யும் காவல்­துறை அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர். கடத்­தி­வந்த போதைப்­பொ­ருள்­களை அதி­கா­ரி­கள் கைப்­பற்றி அது­கு­றித்து விசா­ரணை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். கைது செய்­யப்­பட்ட இரண்டு ஆட­வர்­களும் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர்.