பறவைகளுக்கு இரையிட முடியாமல் வருந்தும் 'பறவை மனிதர்'

பறவைகளுக்கு இரையிட முடியாமல் வருந்தும் 'பறவை மனிதர்'

1 mins read
a35bb20a-ec72-4b7a-8b26-77672b4ba9b9
-

சென்னை: கடந்த 25 ஆண்டு­களாக தின­மும் தன்­னைத் தேடி வந்த நான்­கா­யி­ரம் பற­வை­களுக்கு இரை­யிட்டு வந்­துள்­ளார் சேகர்.

சென்னை ராயப்­பேட்டை பகுதி­யில் வசித்து வரும் அவரை 'பறவை மனி­தர்' என்றே அப்­ப­குதி மக்­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர்.

தர்­ம­புரி மாவட்­டத்­தைச் சேர்ந்த சேகர், 40 ஆண்­டு­க­ளுக்கு முன்பு சென்­னைக்கு வந்­து­விட்­டார். மின்­னணு கேம­ராக்­க­ளைப் பழுது பார்க்­கும் வல்­லு­ந­ரான அவர், 25 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் ராயப்­பேட்டை பகு­தி­யில் வாடகை வீட்டில் குடி­யே­றி­னார்.

பின்னர் அந்த வீட்­டின் மொட்டை மாடி­யில் பற­வை­களுக்கு இரை வைக்­கத் தொடங்­கி­னார். இரை தேடி வரும் பற­வை­க­ளின் எண்­ணிக்கை ஒற்றை இலக்­கத்­தில் இருந்து நான்­காயிரமாக அதி­க­ரித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், வாடகை வீட்டின் உரி­மை­யா­ளர் வீட்டை விற்­று­விட்­டார். அத­னால் அண்­மை­யில் வேறு வீட்­டில் குடி­யேறி உள்­ளார் சேகர். இத­னால் இரை தேடி வரும் புறா, கிளி, சிட்­டுக்­கு­ருவி உள்ளிட்ட பற­வை­கள் ஏமாற்­றத்­து­டன் திரும்­பிச் செல்­வ­தா­கக் கவ­லைப்­ப­டு­கி­றார் சேகர்.

சேகர் வசித்த வீட்டின் உரி­மை­யா­ளர் அதை விற்க முயன்­ற­போது, இயற்கை ஆர்­வ­லர்­கள் பலர் அதை வாங்கி சேகருக்கே வழங்க விரும்­பி­னர். ஆனால் உரி­மை­யா­ளர் அதற்கு உடன்­படா­த­தால் அந்த வீட்­டி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­தா­கச் சொல்­கி­றார் சேகர்.