திருமணமான ஆடவர் காதலியைக் கொன்றதாக சந்தேகம்

1 mins read
7271ba2c-5f17-4e77-9453-129743ddf876
சம்பவம் பொள்ளாச்சியில் நிகழ்ந்தது. படம்: டைம்ஸ் அஃப் இந்தியா -

கோவை: தமிழகத்தில் திருமணமான 30 வயது ஆடவர் ஒருவர், தனது 20 வயது காதலியைக் கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமையன்று (2 மே) போள்ளாச்சி நகரில் மகாலிங்கபுரத்துக்கு அருகே இருக்கும் கெளரி நகர் பகுதியில் நிகழ்ந்தது.

தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு காதலி தொடர்ந்து வற்புறுத்தியதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஆடவர் அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

மாண்ட பெண் ஒரு கல்லூரி மாணவி.

அவரின் பெயர் ஆர். சுபலக்‌ஷ்மி என்று தெரிவிக்கப்பட்டது.

அவரைக் கொன்றதாசச் சொல்லப்படும் ஆடவர் கே. சுஜய்.

அவரைப் பிடிக்க காவல்துறையினர் கேரள மாநிலத்துக்கு சிறப்புப் படை ஒன்றை அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.