'29 சுரங்க ெமட்ரோ ரயில் நிலையம் அமைக்க இறுதியான ஒப்பந்தம்'

'29 சுரங்க ெமட்ரோ ரயில் நிலையம் அமைக்க இறுதியான ஒப்பந்தம்'

2 mins read

சென்னை: சென்னை மாத­வ­ரம்-தர­மணி வரை­யி­லான வழித்­த­டத்­தில் 29 சுரங்க மெட்ரோ ரயில் நிலை­யங்­களை அமைப்­ப­தற்­கான ஒப்­பந்­தம் இறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இன்­னும் மூன்று ஆண்­டு­களுக்­குள் இந்த வழித்­த­டங்­களில் சுரங்க மெட்ரோ ரயில் நிலை­யங்­கள் அமைக்­கும் பணி­கள் முடிக்­கப்­பட வேண்­டும் என சம்­பந்­தப்­பட்ட நிறுவனங்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து ெசன்னை மெட்ரோ ரயில் இரண்­டா­வது திட்­டத்­தின்­கீழ் மாத­வ­ரம்-தர­மணி வரை­யி­லான வழித்­­தடத்­தில் 29 சுரங்க மெட்ரோ ரயில் நிலை­யம் அமைக்­கும் பணி­கள் விரை­வில் துவங்க உள்­ள­தாக சென்னை மெட்ரோ ரயில் நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

மாத­வ­ரம் முதல் சிப்­காட் வரை (45.8 கி.மீ.), கலங்­கரை விளக்­கம் முதல் பூந்­த­மல்லி வரை (26.1 கி.மீ.), மாத­வ­ரம் முதல் சோழிங்­க­நல்­லூர் வரை (47 கி.மீ.) என மொத்­தம் 118.9 கி.மீ. நீளத்­தில் சென்னை மெட்ரோ ரயில் திட்­டம் இரண்­டாம் கட்­டப் பணி­களை மேற்­கொள்ள 63,246 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

மாத­வ­ரம்-தர­மணி வரை­யிலான மெட்ரோ ரயில் திட்­டப் பணி­க­ளுக்­கான சுரங்­கம் தோண்­டும் பணி­கள் சில மாதங்­க­ளுக்கு முன்பே தொடங்­கப்­பட்­டது.

கடந்த 2021ல் இந்த வழித்தடத்தில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கு ஐந்து நிறுவனங்கள் டெண்டர் கோரி இருந்தன.

எனி­னும், சென்னை மெட்ரோ ரயில் நிர்­வா­கம் நிர்­ண­யித்த 'டெண்­டர்' தொகை­யோடு ஒத்­துப் போகா­த­தால் சுரங்க மெட்ரோ ரயில் நிலை­யங்­கள் அமைக்­கும் பணி கால­தா­ம­தம் ஆகி வந்­தது.

இந்­நி­லை­யில், தற்­பொ­ழுது மாத­வ­ரம்-தர­மணி வரை­யி­லான வழித்­த­டத்­தில் சுரங்க மெட்ரோ ரயில் நிலை­யங்­கள் அமைப்­ப­தற்­கான ஒப்­பந்­த­தா­ரர்­கள் இறுதி செய்­யப்­பட்­டுள்­ள­னர்.