ஊட்டியில் முதன்முறையாக ஹெலிகாப்டர் சுற்றுலா

2 mins read

இருநூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் களைகட்டும் கோடை விழா

நீல­கிரி: கோடை விழா­வின் சிறப்­பம்­ச­மாக ஊட்­டி­யில் ஹெலி­காப்­டர் சுற்­றுலா அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மே 13 முதல் 20ஆம் தேதி வரை ஊட்­டி­யில் ஹெலி­காப்­டர் சுற்­று­லா­வும் 30ஆம் தேதி­யன்று பலூன் திரு­வி­ழா­வும் நடை­பெற உள்­ள­தாக சுற்­று­லாத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

"கடந்த இரு­நூறு ஆண்­டு­கால வர­லாற்­றில் ஊட்­டி­யில் முதல் முறை­யாக ஹெலி­காப்­டர் சுற்­றுலா தொடங்­கப்­ப­டு­கிறது. இதன் பின்­னர் படிப்­ப­டி­யாக மருத்­துவ ஹெலி­காப்­டர் சேவை­யும் தொடங்­கப்­படும்," என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தனி­யார் நிறு­வ­னம் மூலம் ஊட்டி திட­லில் இருந்து ஹெலி­காப்­டர் சுற்­றுலா மேற்­கொள்­ளப்­படும். ஹெலி­காப்­ட­ரில் ஒரே சம­யத்­தில் ஆறு பேர் செல்ல முடி­யும். இந்த ஹெலி­காப்­டர் பய­ண­மா­னது பத்து நிமி­டங்­கள் நீடிக்­கும் என்­றும் சுமார் நாற்­பது கிலோ­மீட்­டர் தூரம் வரை பய­ணம் செய்ய முடி­யும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விமான நிறு­வன தக­வ­லின்­படி சுமார் 1,000 அடி உய­ரம் வரை பறந்து ஊட்டி நகரை கண்டு ரசிக்­க­லாம். இதற்கு குறைந்­த­பட்­சம் ரூ.6 ஆயி­ரம் முதல் அதி­க­பட்­ச­மாக ரூ.7,000 வரை கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­படும்.

ஊட்டி நக­ரம் உரு­வாகி சுமார் 200 ஆண்­டு­க­ளா­கின்­றன. இதை­ய­டுத்து இரு­நூ­றா­வது ஆண்டு தொடக்க விழா அண்­மை­யில் நடை­பெற்­றது. அப்­போது, ஊட்­டி­யில் சுற்­று­லாவை மேம்­ப­டுத்­த­வும் பல்­வேறு நிகழ்ச்­சி­களை நடத்­த­வும் தமி­ழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி உள்­ள­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­வித்­தார்.

இந்­நி­லை­யில், கோடை காலத்­தை­யொட்டி நீல­கிரி மாவட்­டத்­தின் பல்­வேறு பகு­தி­களில் மலர் திரு­விழா நடை­பெற உள்­ளது. எதிர்­வ­ரும் 19ஆம் தேதி ஊட்டி தாவ­ர­வி­யல் பூங்­கா­வில் மலர் கண்­காட்சி உள்­பட பல்­வேறு நிகழ்ச்­சி­கள் நடை­பெற உள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மலர் கண்­காட்­சியை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் பார்­வை­யிட உள்­ளார். இந்த ஆண்டு ஊட்­டி­யில் கோடை­விழா இப்­போதே களை­கட்டி வரு­கிறது. கொரோனா நெருக்­கடி காலத்­துக்­குப் பிறகு வெளி­நாட்­டுச் சுற்­றுலா பய­ணி­களும் இந்த விழா­வுக்கு வருகை தரு­வர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஹெலி­காப்­டர் சுற்­றுலா ஊட்­டி­யில் நில­வும் கால நிலை­யைப் பொறுத்து செயல்­ப­டுத்­தப்­படும் என்­றும் பலூன் திரு­வி­ழா­வுக்கு நல்ல வர­வேற்பு கிடைக்­கும் என எதிர்­பார்ப்­ப­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.