தாமதமாக உருவாகும் புதிய புயல் சின்னம்; நீடிக்கும் மழை

தாமதமாக உருவாகும் புதிய புயல் சின்னம்; நீடிக்கும் மழை

2 mins read
68ff5518-6e76-48ad-b6cf-7a6904b179d4
-

நாடு முழுவதும் பருவமழைக்கு முந்தைய கோடை காலத்தில் 18% அதிக மழை பதிவு

சென்னை: புதிய காற்­ற­ழுத்தத் தாழ்வு நிலை உரு­வா­வ­தில் தாம­தம் நில­வி­னா­லும் தமி­ழ­கத்­தில் தொடர்ந்து மழை பெய்­யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக அம்­மை­யம் வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், தமி­ழக கட­லோ­ரப் பகு­தி­களில் மேல் வளி­மண்­டல கீழ­டுக்­குச் சுழற்சி நிலவி வரு­வ­தா­க­வும் ஞாயிற்­றுக்­கி­ழமை உரு­வா­கும் என கணிக்­கப்­பட்ட புதிய காற்­றழுத்தத் தாழ்வு நிலை­யா­னது திங்­கட்­கி­ழமை உரு­வா­கும் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"நாளை 8ஆம் தேதி உரு­வா­கும் காற்­ற­ழுத்­தத் தாழ்­வுப் பகு­தி­யா­னது 9ஆம் தேதி காற்­ற­ழுத்­தத் தாழ்வு மண்­ட­ல­மாக உரு­வா­கும். இதை­ய­டுத்து தமி­ழ­கத்­தி­லும் புது­வை­யி­லும் பெரும்­பா­லான பகு­தி­களில் இடி மின்­ன­லு­டன் கூடிய லேசா­னது முதல் மித­மான மழை பெய்­யக்­கூ­டும்.

"சென்­னை­யி­லும் அதன் புறநகர்ப் பகு­தி­க­ளி­லும் அடுத்த 48 மணி நேரத்­திற்கு வானம் ஓர­ளவு மேக­மூட்­டத்­து­டன் காணப்­படும். அதி­க­பட்ச வெப்­ப­நிலை 35 டிகிரி செல்­சி­யஸ், குறைந்­த­பட்ச வெப்­ப­நிலை 26 டிகிரி செல்­சி­யஸ் அள­வில் இருக்­கக்­கூ­டும்," என வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் வழக்­க­மாக மே மாதம் அக்னி நட்­சத்­திர கால­கட்­டத்­தில் கோடை வெயில் சுட்­டெ­ரிக்­கும். இத­னால் பொது­மக்­கள் வீடு­க­ளுக்­குள் முடங்­கிக்­கி­டப்­ப­தும் வழக்­கம்.

இந்த ஆண்டு நிலைமை தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது. தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் கோடை மழை பெய்து வரு­கிறது. இத­னால் அதிக வெப்­பம் இன்றி பொது­மக்­கள் நிம்­ம­தி­யாக உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்­கு­நர் செந்­தா­மரை கண்­ணன், வரும் 9ஆம் தேதி வரை கும­ரிக்­க­டல், மன்­னார் வளை­குடா, தமி­ழக கட­லோ­ரப் பகு­தி­கள், தென்­மேற்கு வங்­கக் கடல் பகு­தி­கள், தெற்கு அந்­த­மான் கடல், இலங்கை கட­லோ­ரப் பகு­தி­களில் மணிக்கு 45 முதல் 70 கிலோ மீட்­டர் வேகத்தில் சூறா­வளிக்காற்று வீசக்­கூடும் என்­றார். எனவே இந்த நாள்­களில் மீன­வர்­கள் கட­லுக்­குள் செல்ல வேண்­டாம் என்­றும் ஆழ்­க­ட­லில் மீன் பிடிக்­கும் மீன­வர்­கள் உட­ன­டி­யாக கரைக்­குத் திரும்ப வேண்டும் என்­றும் அவர் அறி­வு­றுத்­தி­னார்.

இதற்­கி­டையே நடப்­பாண்­டில் நாடு முழு­வ­தும் கால­நி­லை­யில் மாற்­றம் ஏற்­பட்டு உள்­ள­தாக வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­தது.

பஞ்­சாப், அரி­யானா, ராஜஸ்­தான், உத்­த­ரப் ­பி­ர­தே­சம், உத்­த­ர­காண்ட், இமா­ச­லப் பிர­தே­சம், ஜம்மு காஷ்­மீர் ஆகிய மாநிலங் களில் வழக்­கத்­தை­விட 18 விழுக்­காடு அதிக மழை பதி­வா­கி­யுள்­ளது என்­றும் நாடு முழு­வ­தும் பரு­வ­ம­ழைக்கு முந்­தைய கோடை­கா­லத்­தில் இயல்­பை­விட 28 விழுக்­காடு அதிக மழை பெய்­துள்­ளது என்­றும் அம்­மை­யம் கூறி­யுள்­ளது.

எனினும் நாட்டின் கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் வழக்கத்தைவிட 29% அளவுக்கு மழை குறைந்துள்ளது.