நான்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் முதல்வர்

நான்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் முதல்வர்

1 mins read

சென்னை: இம்­மா­தம் 23ஆம் தேதி இங்­கி­லாந்து, சிங்­கப்­பூர், மலே­சியா, ஜப்­பான் ஆகிய நாடு­க­ளுக்குச் செல்ல தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் பய­ணம் மேற்­கொள்­கி­றார்.

முத­லீட்­டா­ளர்­களை ஈர்க்­கும் நோக்­கத்­து­டன் அவர் இப்­ப­ய­ணத்தை மேற்­கொள்ள இருப்­ப­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

தமி­ழக முதல்­வ­ரின் இந்­தப் பய­ணத்­துக்கு மத்­திய அர­சி­டம் அனு­மதி கோரப்­பட்­டது என்­றும் அனு­மதி கிடைத்­ததை அடுத்து வரும் 23ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை முதல்­வ­ரின் வெளி­நாட்டுப் பய­ணம் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­க­வும் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இந்த பய­ணத் திட்­டம் தொடர்­பாக கடந்த 2ஆம் தேதி நடை­பெற்ற தமி­ழக அமைச்­ச­ரவை கூட்­டத்­தில் விவ­ரிக்­கப்­பட்டு, ஒப்­பு­தல் பெறப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

தமி­ழ­கத்தை வரும் 2030ஆம் ஆண்­டுக்­குள் ஒரு டிரில்­லி­யன் டாலர் பொரு­ளி­ய­லாக மாற்­றும் வகை­யில் வெளிநாடுகளில் இருந்து தொடர் முத­லீ­டு­கள் ஈர்க்­கப்­பட்டு வரு­கின்­றன.