சென்னையில் அனைத்துலகத் தரத்தில் நவீன விளையாட்டுத் திடல்

1 mins read

சென்னை: விளையாட்டு வீரர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் என்ற திட்டத்தை தனியார் பங்களிப்புடன் தமிழக முதல்வர் தொடங்கி வைக்க இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் அனைத்துலகத் தரத்தில் நவீன விளையாட்டுத் திடல் அமைக்கப்படும் என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

தமிழக அரசு விளையாட்டுத் துறைக்கு போதுமான நிதியை ஒதுக்கும் என்றும் மிக விரைவில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் விளையாட்டுத்திடல் அமைக்கும் பணி நிறைவடையும் என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.