சென்னை: ஆந்திர மாநிலத்திடம் இருந்து தமிழகம் பெற்று வரும் கிருஷ்ணா நதிநீர் நேற்று முன்தினம் தமிழக எல்லையை வந்தடைந்தது. கிருஷ்ணா நதி கால்வாய் தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பாய்கிறது.
கிருஷ்ணா நதிநீர் சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டுத் திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை தமிழகம் சில ஏரிகளில் சேமித்து வைத்து, சென்னை மாநகரத்தின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துகிறது.
ஒப்பந்தப்படி, ஆந்திர அரசு ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 12 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும். இந்நிலையில், நடப்பு கோடைக் காலத்தை ஒட்டி, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.

