சென்னை: மூளைச்சாவு அடைந்த 35 வயது ஆடவரின் உடல் உறுப்புகள் ஏழு பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
இவருக்கு கீதாலட்சுமி என்ற மனைவியும் மூன்று வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கிய சௌந்தரராஜனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது ஒரு சிறுநீரகம், இரண்டு கண்கள் உள்ளிட்ட உடல் பாகங்கள் தானமாக வழங்கப்பட அவரது குடும்பத்தார் அனுமதி வழங்கினர்.