தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயர்மட்டப் பாலங்களாக மாறும் 1,281 தரைப்பாலங்கள்

1 mins read

சென்னை: மாநி­லத்­தின் பல்வேறு பகு­தி­களில் உள்ள 1,281 தரைப்பாலங்­களை உயர்­மட்­டப் பாலங்­க­ளாக மாற்ற தமி­ழக அரசு முடிவு செய்­துள்­ளது.

இதற்­கான பணி­களை விரை­வாக முடிக்க வேண்­டும் என்று அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வு­றுத்தி உள்­ள­தாக பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் எ.வ.வேலு தெரி­வித்­துள்­ளார். எதிர்­வ­ரும் 2026ஆம் ஆண்டுக்­குள் புதிய பாலங்­களை அமைக்க இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார்.

பாலங்­க­ளுக்­கான கட்­டு­மானத்­துக்கு முந்­தைய பணி­களான மின் கம்­பங்­கள், குடி­நீர் குழாய்­களை இடம் மாற்­று­வது, மரங்­களை அகற்­று­தல், நிலங்­களைக் கைய­கப்­ப­டுத்­தும் பணி­கள் ஆகி­ய­வற்­றில் கவ­னம் செலுத்த வேண்­டும் என அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. பாலப் பணி­க­ளின் முன்­னேற்­றம் குறித்த ஆய்­வுக்­கூட்டம் சென்­னை­யில் உள்ள நெடுஞ்­சாலை ஆராய்ச்சி நிலைய வளா­கத்­தில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

பாலங்­க­ளுக்­கான கட்­டு­மானப் பணி­யின்­போது ஒவ்­வொரு நிலை­யி­லும் அதி­காரிகள் ஆய்வு மேற்­கொண்டு பாலத்­தின் தரத்தை உறுதி செய்ய வேண்­டும் என அமைச்சர் எ.வ.வேலு அறி­வு­றுத்­தி­ய­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.