பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்ததில் 22 பேர் மரணம்

பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்ததில் 22 பேர் மரணம்

2 mins read
8387b935-b8c9-4469-96e2-967915b1fb03
-

கர்­கோன்: மத்­தி­யப் பிர­தே­சத்­தில் ஆற்­றுப் பாலத்­தின் தடுப்பை உடைத்­துக்­கொண்டு பேருந்து பாய்ந்து விழுந்த விபத்­தில் மூன்று குழந்­தை­கள், 10 பெண்­கள் உட்­பட 22 பேர் உயி­ரி­ழந்­த­னர். 31 பேர் காய­ம­டைந்­த­னர்.

மத்­தி­யப் பிர­தேச மாநி­லம், கர்­கோன் மாவட்­டத்­தின் ஊன் காவல்­நி­லை­யப் பகு­தி­யில் உள்­ளது தங்­கார்­கோன் ஆற்­றுப் பாலம். இப்­பா­லத்­தில் நேற்றுக் காலை சென்­று­கொண்­டி­ருந்த தனி­யார் பேருந்து பக்­க­வாட்­டில் இருந்த தடுப்­புச் சுவரை உடைத் துக்­கொண்டு கீழே பாய்ந்­தது.

தக­வல் அறிந்­த­தும் அவ­சர சிகிச்சை வாக­னங்­க­ளு­டன் சம்­பவ இடத்­துக்கு விரைந்து வந்த காவல்­து­றை­யி­னர் மீட்­புப் பணி­யில் ஈடு­பட்­ட­னர். காய­ம­டைந்­த­வர்­கள் மீட்­கப்பட்டு கர்­கோன் மாவட்ட மருத்­து­வ­மனைக்குக் கொண்டு செல்­லப்பட்­ட­னர்.

"இந்­தூர் நோக்கி பேருந்து விரைந்து கொண்டிருந்தது. அப்போது, போராட் பாலத்­தின் பக்­க­வாட்டுச் சுவரை உடைத்­துக்­கொண்டு 50 அடி உய­ரத்­தில் இருந்து கீழே விழுந்­தது. ஆறு முற்­றி­லும் வறண்­டு­கி­டந்­தது," என டைம்ஸ் ஆஃப் இந்­தியா ஊட­கத்­தி­டம் பேசிய கர்­கோன் காவல்­துறை அதி­காரி ராகேஷ் மோகன் சுக்லா தெரி­வித்­தார்.

கர்­கோன் மாவட்ட காவல் கண்­கா­ணிப்­பா­ளர் தரம்­வீர் சிங் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது, "விபத்­தில் 22 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்; 31 பேர் காய­மடைந்­துள்­ள­னர். மீட்­புப் பணி­கள் நடை­பெற்று வருகின்­றன," என்­றார்.

விபத்­தில் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு தலா ரூ.4 லட்­ச­மும் காயம் அடைந்தவர்­களுக்கு 50,000 ரூபா­யும் சிறு காயம் அடைந்தவர்­க­ளுக்கு 25,000 ரூபா­யும் நிதி­யு­தவி வழங்­கப்­படும் என மாநில அரசு அறி­வித்­துள்­ளது.

இந்த விபத்­தில் ஓட்­டு­நர், நடத்­து­நர், பேருந்தைச் சுத்தம் செய்பவர் ஆகி­யோ­ரும் உயி­ரி­ழந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. விபத்­தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு முதல்­வர் சிவ­ராஜ் சிங் சவு­கான் இரங்­கல் தெரி­வித்­துள்­ளார்.

முதற்­கட்ட தக­வ­லின்­படி, ஓட்டு ந­ரின் தூக்­க கலக்கம் கார­ண­மாக பேருந்து கட்­டுப்­பாட்டை இழந்­து விபத்தில் சிக்கியதாகவும் தெரியவந்துள்ளது.