கருகிய வாசம்: திருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் இந்தோனீசியாவில் தரையிறக்கம்

கருகிய வாசம்: திருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் இந்தோனீசியாவில் தரையிறக்கம்

1 mins read

திருச்சி: திருச்­சி­யில் இருந்து சிங்­கப்­பூர் நோக்­கிச் சென்று கொண்­டி­ருந்த இண்­டிகோ நிறு­வனத்­தின் விமா­னத்­தில் திடீரென கரு­கிய புகை வாசம் வந்­த­தால், முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக இந்­தோ­னீ­சி­யா­வில் தரை­ இ­றக்­கப்­பட்­டது.

செவ்வாய்க்கிழமை அந்த ஏர்­பஸ் ஏ320 ரக விமா­னம் இந்­தோ­னீ­சி­யா­வில் தரை­யி­றக்­கப்­பட்­ட­தும் உரிய பாது­காப்­புப் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

முதற்­கட்ட சோத­னை­யின்­­போது எந்­த­வி­த­மான பழு­தும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை எனக் கூறப்­ப­டு­கிறது. அந்த விமா­னத்­தில் பய­ணம் செய்த அனைத்து பய­ணி­களும் அது தரை­யி­றக்­கப்­பட்ட கோல­நாமு (Kualanamu) நக­ரில் தங்க வைக்­கப்­பட்­ட­னர். பின்­னர் மாற்று விமா­னம் மூலம் அவர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர். இண்­டிகோ விமா­னம் திருச்­சி­யில் இருந்து புறப்­பட்­ட­போது அதன் மீது பறவை மோதி­யி­ருக்­கக்­கூ­டும் எனச் சந்­தே­கிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் ஆய்வு நட­வ­டிக்­கைக்­காக அது இந்­தோ­னீ­சி­யா­வில் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் மத்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து இயக்­கு­ந­ர­கம் தெரி­வித்­துள்­ளது.

உரிய நடை­மு­றை­க­ளைப் பின்­பற்றி அந்த விமா­னத்­தின் விமானி, முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அரு­கி­லுள்ள விமான நிலை­யத்­தில் விமா­னத்தை தரை­யி­றக்­கி­ய­தாக இண்­டிகோ நிறு­வ­னத் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.