30 ஆண்டுகளுக்குப் பிறகு 197% அதிக மழை பதிவு

30 ஆண்டுகளுக்குப் பிறகு 197% அதிக மழை பதிவு

1 mins read

கோவை: நடப்­பாண்­டில் தமி­ழ­கத்­தி­லேயே மிக அதி­க­பட்­ச­மாகக் கோவை­யில் கோடை மழை 197 விழுக்­காடு கூடு­த­லாகப் பெய்­தது தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த முப்­பது ஆண்­டு­கால சரா­ச­ரியை ஆய்வு செய்­யும்­போது இந்த ஆண்டு தமி­ழ­கத்­தில் கோடை மழை 109 விழுக்­காடு அதி­கம் பெய்­துள்­ளது.

கடந்த 30 ஆண்­டு­களில் தமி­ழ­கத்­தின் கோடை மழை­யின் சரா­சரி 83.5 மில்லி மீட்­டர் ஆகும். இந்­நி­லை­யில் நடப்­பாண்­டில் நேற்று முன்­தி­னம் வரை 174.9 மில்லி மீட்­டர் மழை பெய்­துள்­ளது.

கோவை­யில் கோடை மழை­யின் 30 ஆண்டு சரா­சரி அளவு 108.1 மில்லி மீட்­ட­ரா­கும். ஆனால் நடப்­பாண்­டில் இது­வரை 321.2 மில்லி மீட்­டர் மழைப் பொழிவு பதி­வா­கி­யுள்­ளது. மேலும் 20 நாள்­க­ளுக்குக் கோடை மழை நீடிக்க வாய்ப்­புள்­ள­தால் ஒட்­டு­மொத்த மழைப்­பொழிவு விகிதம் அதிகரிக்கக்கூடும்

இத­னி­டையே, தமிழ்­நாட்­டில் கடந்த 24 மணி நேரத்­தில் அதி­க­பட்­ச­மாக மதுரை தல்­லா­கு­ளம், திருப்­பூர் மாவட்­டம் மூல­னூர் பகு­தி­களில் தலா 6 சென்­டி­மீட்­டர் மழை பதி­வா­கி­யுள்­ளது.

சுரு­ளக்­கோடு, நிலக்­கோட்டை, முள்­ளங்­கி­னா­விளை, மதுரை தெற்­கில் தலா 5 சென்­டி­மீட்­டர் மழை பெய்­துள்­ளது என்­றும் பெருஞ்­சாணி அணை, நாமக்­கல், திரு­பு­வ­னம், புத்­தன் அணை, மேட்­டுப்­பட்டி, மதுரை வடக்­கில் தலா 4 சென்டி மீட்­டர் மழை கொட்­டி­யுள்­ளது என்­றும் ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

இதனால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.