விழுப்புரம்: தலைமைச் செயலாளர் இறையன்புவின் உத்தரவை அடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம், பிற மாவட்டத் துறை அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் திருக்குறள் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், தினமும் ஒரு குறளும் அதற்கான பொருளும் எழுதி வைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தினமும் பொருளுடன் கூடிய ஒரு திருக்குறளைக் கட்டாயம் எழுதிவைக்க வேண்டும். தமிழ்கலைச் சொற்களைக் காட்சிப்படுத்த வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு இறையன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார்.

