சென்னை: துபாய், இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 23 கிலோ 400 கிராம் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் ெசய்துள்ளனர்.
துபாயில் இருந்து இலங்கை வழியாகச் சென்னைக்கு வந்த பயணி ஒருவரைச் சந்தேகத்துடன் பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள், அவரிடம் இருந்து 13 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்த பயணி ஒருவரைச் சோதனை செய்த அதிகாரிகள், 10 கிலோ 400 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். மொத்தம் 23 கிலோ 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ஏறக்குறைய 15 கோடியாகும்.

