காட்டுயானைக்கு கும்பிடு போட்ட ஆடவருக்கு ரூ.10,000 அபராதம்

காட்டுயானைக்கு கும்பிடு போட்ட ஆடவருக்கு ரூ.10,000 அபராதம்

1 mins read

தர்மபுரி: காட்டு யானைக்கு கும்பிடு போடுவதுபோல் காணொளி வெளியிட்ட முருகேசன், 50, என்ற ஆட வருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து பென்னாகரம் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதியில் 70க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித் திரியும் நிலையில், உணவு, தண்ணீர் தேடி யானைகள் அவ்வப்போது சாலையைக் கடப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி சாலை ஓரத்தில் நின்றிருந்த காட்டு யானையிடம் ஒருவர் குறும்புத்தனம் செய்துள்ளார். அந்த யானையை தனது அபரிமிதமான சக்தியைக் கொண்டு விரட்டுவதாகக் கூறி அதன் அருகில் சென்றுள்ளார். பின்னர் அந்த யானையை நோக்கி வணங்கிய அவர், யானையை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளார். இவற்றை அங்கிருந்த ஒருவர் காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட வனத்துறை யினர் இப்போது அபராதம் விதித்துள்ளனர்.