காரைக்காலை அடுத்த வாஞ்சூர் கடற்கரை பகுதியில் தனியார் துறைமுகம் இயங்கி வரும் துறைமுகத்திற்குள் 100 அடி நீளமுள்ள திமிங்கிலம் ஒன்று நுழைந்துவிட்டது. ஆனால் அங்கு போதுமான தண்ணீர் இல்லாததால் அது நீந்தி வெளியேற முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது.
பின்னர் அப்பகுதியில் வசித்துவரும் ஏராளமான மீனவர்கள் திரண்டு வந்து, துறைமுக அதிகாரிகளின் உதவியுடன் அந்தத் திமிங்கிலத்தை கயிற்றில் கட்டி விசைப்படகு மூலம் இழுத்துச் சென்று நடுக்கடலில் கொண்டுபோய் விட்டனர்.

