ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்

ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்

1 mins read

மோக்கா புயல் காரணமாக ராமேசுவரம் பகுதியில் வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், தனுஷ்கோடி, அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் கடல் நீர் சாலைக்கு வந்தது.

அதேசமயம், ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தக் கடற்கரைப் பகுதியில் 50 மீட்டர் தொலைவுக்குக் கடல் உள்வாங்கியது. இதனால், பக்தர்கள் அச்சம் அடைந்தனர். பாம்பன் வடக்குக் கடற்கரைப் பகுதியிலும் கடல் உள் வாங்கியது. அதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தரை தட்டியதாகக் கூறப்படுகிறது.