'மகிழ்ச்சி வீதி' கொண்டாட்டம்

'மகிழ்ச்சி வீதி' கொண்டாட்டம்

1 mins read
7e06faec-bd74-4255-a874-166c00f2a20c
-

சென்னை: 'மகிழ்ச்சி வீதி' (ஹேப்பி ஸ்தி­ரீட்) என்ற பெய­ரில் நடை­பெற்ற நிகழ்ச்சி சென்னை மக்­களை உற்­சா­கப்­ப­டுத்­தி­யது.

சென்னை மாந­க­ராட்­சி­யும் தனி­யார் அமைப்­பு­களும் இணைந்து நடத்­திய இந்­நி­கழ்ச்சி ஆடல், பாடல் ஏற்­பா­டு­க­ளு­டன் களை­கட்­டி­யது.

'மகிழ்ச்சி வீதி' நிகழ்­வின்­போது சென்னை அண்­ணா­சா­லை­யின் பல்­வேறு இடங்­களில் போக்கு­வ­ரத்து நிறுத்­தப்­பட்­டி­ருக்­கும். எப்­போ­தும் பர­ப­ரப்­பா­கக் காட்சி அளிக்­கும் அந்­தச் சாலை­யில் பொது­மக்­கள் விருப்­பம்­போல் நட­மாடி மகி­ழ­லாம் என்­ப­து­டன் ஆடல், பாடல் உள்­ளிட்ட கொண்­டாட்ட நிகழ்­வு­க­ளி­லும் பங்­கேற்­க­லாம்.

கடந்த மூன்று வாரங்­க­ளாக ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் காலை 6 முதல் 9 மணி வரை 'மகிழ்ச்சி வீதி' நிகழ்வு நடை­பெற்று வந்­தது.

எதிர்­வ­ரும் 21ஆம் தேதி­யும் இந்த நிகழ்வு நடை­பெ­றும் என ஏற்­பாட்­டா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். அன்றாடப் பரபரப்பில் இருந்து விலகி நின்று உற்சாகமாக பொழுதைக் கழிக்க இந்நிகழ்வு உதவுகிறது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.