தேர்தலில் போட்டி: விஜய் மக்கள் இயக்க நிர்வாகி

தேர்தலில் போட்டி: விஜய் மக்கள் இயக்க நிர்வாகி

1 mins read

திரு­வா­ரூர்: விஜய் மக்­கள் இயக்­க­மா­னது எதிர்­வ­ரும் 2026 சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் கள­மி­றங்க வாய்ப்­புள்­ள­தாக அந்த இயக்­கத்­தின் மாண­வ­ரணிச் செய­லா­ளர் ஆனந்த் தெரி­வித்­துள்­ளார்.

திரு­வா­ரூ­ரில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அவர், விஜய்­யின் பிறந்­த­நா­ளுக்கு பின்பு நல்ல ஒரு மாற்­றம் ஏற்­படும் என்றும் தொண்­டர்­கள் ஆசைப்­படு­வது போல் முடி­வெ­டுக்­கப்­படும் என்­றும் குறிப்­பிட்­டார்.

"விஜய் மக்­கள் இயக்­கம் சார்பில் அடுத்த மாதம் சென்னை­யில் பெரிய அள­வில் கூட்­டம் நடை­பெ­றும். அதற்­கான ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­வதா­கத் தெரி­கிறது. நாடா­ளுமன்ற, சட்­டப்­பேரவைத் தொகுதி வாரி­யாக அர­சி­யல் நில­வ­ரம் குறித்து ஆய்வு மேற்­கொள்ள வேண்­டும் என நிர்­வா­கி­க­ளி­டம் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அந்­தப் பணியைச் செய்து கொண்­டி­ருக்­கி­றோம்.

"இந்த மாத இறு­திக்­குள் ஆய்வு முடி­வு­களை தலை­மை­யகத்­துக்கு அனுப்­பச் சொல்லி இருக்­கி­றார்­கள். தேர்­த­லில் போட்­டி­யிட விரும்­பு­வோர் அது­கு­றித்து தெரி­விக்­க­லாம். எனி­னும் மக்­கள் இயக்­கம் சார்­பில் யார் வேட்­பா­ள­ராக நிற்க வேண்­டும் என்­பது குறித்து விஜய்­தான் முடி­வெ­டுப்­பார்," என்று ஆனந்த் தெரி­வித்­துள்­ளார்.

விஜய் மக்­கள் இயக்­கம் தேர்­தல் களம் காண்­பது தொடர்­பாக அவ்­வப்­போது ஆரூ­டச் செய்­தி­கள் வெளி­யாகி வரு­கின்­றன. எனி­னும் அந்த இயக்­கத்­தின் முக்­கிய நிர்­வா­கி­கள் யாரும் அதி­கா­ர­பூர்வ அறி­விப்­பு­கள் எதை­யும் வெளி­யிட்­ட­தில்லை.

இந்­நி­லை­யில், மாண­வ­ரணி நிர்­வாகி தெரி­வித்­துள்ள தக­வல் விஜய் ரசி­கர்­களை உற்­சா­கத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது.