14 மாவட்டங்களை வாட்டி வதைக்கும் வெயில்

14 மாவட்டங்களை வாட்டி வதைக்கும் வெயில்

2 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் கத்­திரி வெயில் காலம் தொடங்­கி­யுள்ள நிலை­யில், நாள்­தோ­றும் வெயிலின் தாக்­கம் கடு­மை­யாகி வரு­கிறது.

நேற்று முன்­தி­னம் 14 மாவட்­டங்­களில் நூறு டிகி­ரிக்­கும் அதி­க­மான வெயில் பதி­வாகி உள்­ளது. இத­னால் பொது­மக்­க­ளின் அன்­றாட வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டது.

பொது­மக்­கள் வெயி­லுக்கு அஞ்சி பெரும்­பா­லான நேரம் வீடு­களில் முடங்­கிக் கிடப்­ப­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த சில நாள்­க­ளா­கப் பெய்து வந்த கோடை மழை தற்­போது வெகு­வா­கக் குறைந்து­விட்­டது. இதை­ய­டுத்து கடந்த 4ஆம் தேதி அக்னி நட்­சத்­தி­ரம் எனப்­படும் கத்­திரி வெயில் காலம் தொடங்கி உள்­ளது.

அக்னி நட்­சத்­தி­ரத்­தின்­போது தமி­ழ­கத்­தின் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் வெயில் சுட்­டெரிப்­பது வழக்­கம்.

அதற்­கேற்ப கடந்த பத்து நாள்­க­ளுக்­கும் மேலாக தமி­ழக மக்­களை வெயில் வாட்டி வரு­கிறது.

குறிப்­பாக அடுத்த ஐந்து நாள்­க­ளுக்கு வெயி­லின் தாக்­கம் கடு­மை­யாக இருக்­கும் என்­றும் வரும் 29ஆம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்­கும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­கா­லக்­கட்­டத்­தில் 117 டிகிரி பாரன்­ஹீட் வரை வெப்ப நிலை பதி­வா­கும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

கடந்த சில நாள்­க­ளாக கோடை காலத்­துக்கு ஏற்ற பழங்­க­ளின் விற்­பனை தமி­ழ­கத்­தில் சூடு பிடித்­துள்­ளது. பிற மாநி­லங்­களில் இருந்து இப்­ப­ழங்­கள் கொண்டு வரப்­ப­டு­கின்­றன.

இள­நீர், நுங்கு, நீர் மோர், தர்பூ­ச­ணிப் பழங்­கள், பழ­ர­சங்­களின் விற்­பனை அதி­க­ரித்­துள்ள­தாக வியா­பா­ரி­கள் மகிழ்ச்சி தெரி­வித்­துள்­ள­னர்.

சென்னை, வேலூர், திருச்சி உள்­ளிட்ட நக­ரங்­களில் நேற்று வெயிலின் கடுமை வழக்­கத்­தை­விட அதி­க­மாக இருந்­த­தாக பொது மக்­கள் கூறி­னர்.