திருச்சி: திருச்சி அருகே உள்ள மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம் ஏந்திச் செல்லும் ஊர்வலம் நடைபெற்றது. இதில் இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
அப்போது இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவ்வழியே வந்தபோது, பக்தர்கள் தாங்களாகவே ஒதுங்கி நின்று அவை முன்னேறிச் செல்ல வழிவிட்டனர். இது தொடர்பான காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.

