1,558 பேர் கைது; தமிழகம் எங்கும் கட்டளை பறக்கிறது

1,558 பேர் கைது; தமிழகம் எங்கும் கட்டளை பறக்கிறது

2 mins read
80481722-7472-4c36-b2a6-f7aef8063650
-
multi-img1 of 2

இரு சம்பவங்களில் மரணம் 18 ஆகியது; கள்ளச்சாராயத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை

சென்னை: தமிழ்­நாட்­டின் விழுப்­பு­ரம், செங்­கல்­பட்டு மாவட்­டங்­களில் நிகழ்ந்த இரண்டு கள்­ளச்­சா­ராய சம்­ப­வங்­களில் மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 18ஆக உயர்ந்­து­விட்­டது.

இந்த நிலை­யில், தமிழ்­நாடு முழு­வ­தும் கள்­ளச்­சா­ரா­யம் துடைத்­தொ­ழிக்­கப்­படும். கள்­ளச்­சா­ரா­யப் பேர்­வ­ழி­கள் இரும்­புக்­கரம் கொண்டு நசுக்­கப்­ப­டு­வர் என்று தமி­ழக முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்து இருக்­கி­றார்.

இத­னை­ய­டுத்து மாநி­லம் முழு­வ­தும் குறிப்­பாக விழுப்­பு­ரம், கட­லூர், மயி­லா­டு­துறை, நாகப்­பட்­டி­னம், செங்­கல்­பட்டு மாவட்­டங்­களி­லும் மலை வனப்­ப­கு­தி­களி­லும் கண்­கா­ணிப்­பைத் தீவிரப்­படுத்த மாநில காவல்­துறை உயர் அதி­காரி சி சைலேந்­தி­ர­பாபு உத்­த­ர­விட்டார். காவல்­துறை தலைமை இயக்கு­ந­ரான அவர் திங்­கட்­கி­ழமை இரவு அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டார்.

"இரண்டு கள்­ளச்­சா­ராய சம்­ப­வங்­கள் தொடர்­பில் கடந்த இரண்டு நாள்­களில் மாநி­லம் முழு­வ­தும் 1,558 பேர் கைது செய்­யப்­பட்டு இருக்­கி­றார்­கள். 1,842 வழக்­கு­கள் பதி­யப்­பட்டடன.

"மாநி­லம் முழு­வ­தற்­கும் உத்­தரவு பிறப்­பிக்­கப்­பட்டுள்­ளது. கள்­ளச்­சா­ராயக் கட்­ட­மைப்­பு­களை நசுக்கி துடைத்­தொ­ழிக்­கும்­படி அதி­கா­ரி­க­ளுக்குக் கட்­டளை இடப்­பட்டுள்ளது," என்று அந்த அறிக்கை தெரி­வித்­தது.

மொத்­தம் 19,028 லிட்­டர் சாராயம் கைப்­பற்­றப்­பட்­டது. 4,973 2லிட்­டர் ஊரல் அழிக்­கப்­பட்­டது.

இந்த ஆண்­டில் இது­வ­ரை­ கள்ளச்­சா­ரா­யம் தொடர்­பில் 4,534 பெண்­கள் உட்­பட 55,173 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். 55,474 வழக்­கு­கள் பதி­யப்­பட்டுள்ளன.

திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் ஆறு தனிப்­ப­டைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. தமிழ்­நாடு, ஆந்­திரா எல்­லை­யில் அதி­கா­ரி­கள் தீவிர கள்­ளச்­சா­ராய சோத­னை­யில் ஈடு­பட்டு வரு­கி­றார்­கள்.

கள்­ளச்­சா­ரா­யத்தைக் குடிக்க வேண்­டாம் என்று பொது­மக்­களுக்கு ஆலோ­சனை கூறும் இயக்­கத்தைத் தொடங்கி உள்ள அதி­கா­ரி­கள், பல தொலை­பேசி எண்­களை வெளி­யிட்டு சாராயம் பற்­றிய தக­வல்­களைத் தெரி­யப்­ப­டுத்­தும்­படி வேண்­டு­கோள் விடுத்து இருக்­கி­றார்­கள்.

விழுப்­பு­ரம், செங்­கல்­பட்டு மாவட்­டங்­களில் கள்­ளச்­சா­ரா­யம் குடித்ததால் பாதிக்­கப்­பட்­ட­ 66 பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள்.

அவர்­க­ளுக்கு அளிக்­கப்­படும் சிகிச்­சையைக் கண்­கா­ணிக்க சிறப்பு அதி­காரி நிய­மிக்­கப்­பட்டு இருப்­ப­தாகத் தெரிவித்த மாநில சுகா­தார அமைச்­சர் மா சுப்­பி­ர­மணி­யன், மெத்­த­னால் வேதிப்­பொருள் பயன்­ப­டுத்­து­வதைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வடிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும் என்­றும் கூறி­னார்.