சென்னை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று சந்தித்துப் பேசினார்.
விழுப்புரத்தில் நடக்கும் பட்டியலின பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க சீதாராம் யெச்சூரி தமிழகம் வந்துள்ளார்.
மரியாதை நிமித்தமாக முதல்வரைச் சந்தித்துப் பேசியதாகவும் கர்நாடக தேர்தல் முடிவுகள், மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு பற்றி முதல்வருடன் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

