வெயில் நேரத்தில் வெளியில் வரவேண்டாம் என அறிவுரை

வெயில் நேரத்தில் வெளியில் வரவேண்டாம் என அறிவுரை

2 mins read
f7d92a7d-560d-40ee-97e9-305e2f7c5325
-

சென்னை: தமி­ழ­கத்­தில் அடுத்த சில நாள்­க­ளுக்கு வெப்­ப­நிலை வழக்­கத்­தைக் காட்­டி­லும் 3 டிகிரி அதி­க­ரிக்­கும் என்று வானிலை ஆய்வு நிலை­யம் எச்­ச­ரித்து உள்­ளது.

அக்னி நட்­சத்­தி­ரம் எனும் கத்­திரி வெயில் காலம் என்­ப­தால் தமி­ழ­கத்தை வெப்­பம் வாட்டி வதைக்­கிறது.

பல ஊர்­களில் அதி­க­பட்ச வெப்­ப­நிலை பதி­வா­கி வருகிறது. செவ்­வாய்க்­கி­ழமை தமி­ழ­கம் முழு­வ­தும் 18 நக­ரங்­களில் 37.8 டிகிரி செல்­சி­யசுக்கு மேல் (100 டிகிரி ஃபாரன்­ஹீட்) பதி­வா­னது.

சென்னை மீனம்­பாக்­கத்­தில் அதி­க­பட்­ச­மாக 42.7 டிகிரி வெப்­பம் நில­வி­யது. அந்த வட்­டா­ரத்­தில் ஏறக்­கு­றைய ஆறு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இந்த அள­வுக்கு அதி­கம் வெப்­பம் பதி­வா­னது.

இதற்கு அடுத்­த­ப­டி­யாக வேலூ­ரில் 42.18, நுங்­கம்­பாக்­கத்­தில் 41.8 டிகிரி வெப்­பம் காணப்­பட்­டது.

இது­கு­றித்து வானிலை முன்­ன­றி­விப்பு வெளி­யிட்ட சென்னை வானிலை ஆய்வு நிலை­யம், அடுத்த ஒரு­சில நாள்­க­ளுக்கு வெப்­பம் அதி­க­ரிக்­கும் என்­றும் காற்­றின் ஈரப்­ப­தம் குறைவு கார­ண­மாக இரவு நேரத்­தில் அதி­கப் புழுக்­கம் நில­வும் என்­றும் தெரி­வித்­தது.

மேலும், தமிழ்­நாடு, புதுச்­சே­ரி­யில் காரைக்­கால் ஆகிய பகு­தி­களில் ஓரிரு இடங்­களில் அதி­க­பட்ச வெப்­பம் இயல்­பான நிலையிலிருந்து 2 அல்­லது 3 டிகிரி அதி­க­மாக இருக்­கக்­கூ­டும் என்­றும் அது குறிப்­பிட்டு உள்­ளது.

மேற்­குத் திசை காற்று மற்­றும் வெப்ப சல­னம் கார­ண­மாக, இந்தப் பகு­தி­களில் சனிக்­கி­ழமை (மே 20) வரை இடி, மின்­ன­லு­டன் கூடிய லேசா­னது முதல் மித­மான மழை பெய்­யக்­கூ­டும் என­வும் சென்னை வானிலை ஆய்வு நிலை­யம் கூறி­யுள்­ளது.

அதி­க­ளவு வெப்­பத்­தைத் தாங்க இய­லா­த­வர்­கள் மயக்­கமடைதல் உள்­பட பல்­வேறு உடல்நலப் பிரச்­சி­னை­க­ளைச் சந்­திக்க வாய்ப்பு உள்­ள­தால் பொது­மக்­கள் வெயில் அடிக்கும் மதிய நேரத்­தில் வீட்­டை­விட்டு வெளியே வரவேண்­டாம் என்­றும் அது பாது­காப்பு எச்­ச­ரிக்­கையை அறி­வித்­துள்­ளது.

அண்­மை­யில் வீசிய மோக்கா புயல், அதிக வெப்­பத்­தைக் கிளப்­பி­விட்­டுச் சென்­ற­தாக ஊட­கச் செய்­தி­கள் குறிப்­பிட்­டன.

தமிழகத்தில் 42.7 டிகிரி வெப்பம்; ஓரிரு நாளில் இன்னும் அதிகமாகக் கொதிக்குமாம்