யானை தாக்கி ஆராய்ச்சி மைய மாணவர் மரணம்

யானை தாக்கி ஆராய்ச்சி மைய மாணவர் மரணம்

1 mins read

கோவை: கோவை ஆனைக்­கட்டி வட்டாரம் யானை­கள் உள்­பட பல்­வேறு வன­வி­லங்­கு­கள் நட­மா­டும் பகு­தி­. இந்­தப் பகு­தி­யில் மத்­திய அரசு நிறு­வ­ன­மான சலீம் அலி பற­வை­கள் ஆராய்ச்சி மையம் செயல்­பட்டு வரு­கிறது.

நாடு முழு­வ­தும் உள்ள பல்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் இங்கு ஆராய்ச்­சிப் படிப்­பு­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

ராஜஸ்­தான் மாநி­லத்­தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாண­வர் விஷால் ஸ்ரீமல், 23, என்­ப­வர் செவ்­வாய்க்­கி­ழமை இரவு ஆராய்ச்சி மைய வளா­கத்­திற்­குள் நடந்து சென்­ற­போது காட்டு யானை ஒன்று குறுக்­கிட்டு கடு­மை­யா­கத் தாக்­கி­யது.

அவ­ரது அல­றல் சத்­தம் கேட்டு அரு­கில் இருந்­த­வர்­கள் ஒடி வந்து அவரை மீட்டு கோட்­டை­துரை அரசு மருத்­து­வ­மனைக்­குக் சென்­ற­னர். அவ­ரது மார்பு எலும்பு முறிந்து, வலது கால் பகு­தி­யில் ரத்­தக்­க­சிவு ஏற்­பட்ட நிலை­யில் முத­லு­தவி சிகிச்சை அளிக்­கப்­பட்டு மேல் சிகிச்­சைக்­காக கோவை தனி­யார் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார்.

அங்கு அவ­ருக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்த நிலை­யில், சிகிச்சை பல­னின்றி நேற்று உயி­ரி­ழந்­தார்.

இது குறித்து தடா­கம் காவல்­து­றை­யி­னர் வழக்­குப் பதிவு செய்து விசா­ரணை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.