கள்ளச்சாராயம் விற்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு

கள்ளச்சாராயம் விற்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு

2 mins read
6be3da1e-3564-4c40-b86f-ec250bb8ca7e
-

சென்னை: கள்­ளச்­சா­ராய மர­ணங்­கள் குறித்­தும் தமிழ்­நாட்­டில் கள்­ளச்­சா­ரா­யத்தை ஒழிக்க நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­வது குறித்­தும் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டா­லின் தலை­மை­யில் காவல்­துறை மற்­றும் மது­வி­லக்கு ஆயத்­தீர்­வைத் துறை அதி­கா­ரி­கள் ஆய்­வுக் கூட்­டம் தலை­மைச் செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது.

கூட்­டத்­தில் பேசிய ஸ்டா­லின், மாநில அள­வில் மது­வி­லக்கு தொடர்­பாகத் தக­வல் அளிக்க 10581 என்­னும் தொலை­பேசி எண் பயன்­பாட்­டில் உள்­ளதை மக்­க­ளி­டம் பிர­ப­லப்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொண்­டார்.

இந்த எண் மூல­மா­க­வும் வாட்ஸ்­அப் வாயி­லா­க­வும் பெறப்­படும் புகார்­களை கூடு­தல் காவல்­துறை இயக்­கு­நர் (மது­வி­லக்கு அம­லாக்­கம்) கண்­கா­ணித்து உட­னுக்­கு­டன் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றார் அவர்.

மேலும், கள்­ளச்­சா­ரா­யம் மற்­றும் போதைப்­பொ­ருள்­கள் தடுப்பு சம்­பந்­த­மாக மாவட்ட ஆட்­சித் தலை­வர் தலை­மை­யில் மாவட்ட அள­வில் ஒவ்­வொரு திங்­கள்­கி­ழ­மை­யும் ஆலோ­ச­னைக் கூட்­டத்தை நடத்­த­வும் அவர் உத்­த­ர­விட்­டார்.

"கள்­ளச்­சா­ரா­யம் மற்­றும் போதைப் பொருள்­க­ளால் ஏற்­படும் தீமை­கள் குறித்து பொது­மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த வேண்­டும். இதனை பள்­ளி­கள், கல்­லூ­ரி­கள், தன்­னார்­வத் தொண்டு நிறு­வ­னங்­கள் மற்­றும் மக­ளிர் சுய­உ­த­விக்­கு­ழுக்­க­ளைக் கொண்டு நடத்த வேண்­டும்.

"கள்­ளச்­சா­ரா­யம் மற்­றும் போதைப்­பொ­ருள்­களைத் தொடர்ந்து விற்­பனை செய்­ப­வர்­கள் மீது குண்­டர் சட்­டத்­தில் பார­பட்­ச­மின்றி நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும்.

"தொழிற்­சா­லை­களில் எரி­சா­ரா­யம் மற்­றும் மெத்­த­னால் பயன்­பாட்­டைக் கண்­கா­ணித்து, அது விஷச்­சா­ரா­யம் காய்ச்­சு­வ­தற்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டா­மல் இருக்­கு­மாறு அதி­கா­ரி­கள் கண்­கா­ணிக்க வேண்­டும்," என்­றும் முதல்­வர் ஸ்டா­லின் பேசி­னார்.

விஷச்­சா­ரா­யம்

இதற்­கி­டையே, 22 உயிர்களைப் பலி­வாங்­கி­யது கள்­ளச்­சா­ரா­யம் அல்ல என்­றும் மெத்­த­னால் கலக்­கப்­பட்ட விஷச்­சா­ரா­யம் என்­றும் தலை­மைக் காவல்­துறை அதி­காரி சைலேந்­தி­ர­பாபு கூறியுள்­ளார்.